தீபிகாவும் இல்லை கத்ரீனாவும் இல்ல, பிரசவத்திற்கு பின் உடல் எடை குறைத்து இந்தியன் 2 ஷூடிங்கிற்கு வந்த காஜல் - வீடியோ இதோ.

By Siva · 14/8/2022

குழந்தை பெற்றுவிட்டதால் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் நீக்கப்பட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பிற்கு காஜல் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. பின் கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து:

இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே சமயம் நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், இந்த படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது.

இந்தியன் 2வில் காஜல் :

இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் எப்போ தொடங்கப்படும்? என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் சங்கர் அவர்கள் பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறி இருந்தார். அதன்படி செப்டம்பர் மாதம் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

https://twitter.com/balajidtweets/status/1555161955991785472

குழந்தை பிறந்ததால் விலகிய காஜல் :

தற்போது அவர் தாய் ஆனதால் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு பதில் தீபிகா படுகோன் அல்லது கத்ரினா கைப் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஜல் அகர்வால் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது அவரிடம் இந்தியன் 2 பற்றி கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

மீண்டும் படப்பிடிப்பில் காஜல் :

அதற்கு பதில் அளித்த அவர் , இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளேன். நான் விலகி விட்டதாக வந்த தகவல் எல்லாம் பொய். செப்டம்பர் 13 முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கும் நிலையில் அதில் பங்கேற்க காஜல் மும்பையில் இருந்து கிளம்பி இருக்கிறார். அவர் இந்த படத்திற்காக பிரசவத்திற்கு பின் உடல் எடையையும் குறைத்து இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full