நடிகை மீனா குறித்து கலா மாஸ்டர் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு இடையில் மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு நைனிகா என்ற ஒரு மகள் இருக்கிறார். மேலும், மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு காரணம் புறாக்களின் எச்சம் கலந்த காற்றை சுவாசித்ததனால் இந்த நோய் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. பின் இவருடைய உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். வித்யாசாகரின் இறப்பிற்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், மீனாவிற்கு ஆறுதலாக அவளுடைய தோழிகள் தான் இருக்கின்றார்கள்.

Advertisement

மீனா குறித்த தகவல்:

கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் வந்த கொண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். அதோடு மீனாவின் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. மீனாவிற்கு உறுதுணையாகவும், எல்லா விஷயத்திலும் பக்கபலமாகவும் இருந்தவர் கலாம் மாஸ்டர். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் கலா மாஸ்டர், எனக்கும் மீனாவுக்கும் 20 வருடம் நட்பு. சூட்டிங் நேரத்தில்தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். நான், மீனா, மீனாவின் அம்மா எல்லோருமே ஜாலியாக ஒன்னாக தான் ஷாப்பிங் போவோம்.

கலா மாஸ்டர் பேட்டி:

அப்ப ஆரம்பித்த நட்பு இப்போது வரை சந்தோசமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மீனா எல்லோரிடமும் அன்பாக இருப்பார், கொஞ்சம் குழந்தைத்தனமும் இருக்கும். இத்தனை வருட நட்பில் எங்களுக்குள் சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கூட வந்தது கிடையாது, ஈகோவும் கிடையாது. எல்லா நல்லது, கெட்டதிலும் அன்பையும் ஆறுதலையும் பரிமாறிக் கொள்வோம். இரண்டு பேருக்குமே நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. இருந்தாலும் எங்களுடைய புரிதல் ரொம்ப ஆழமானது. அவள் தன்னோட கணவரை காப்பாற்ற ரொம்பவே அலைந்து திரிந்து போராடினாள். எவ்ளோ கஷ்டப்பட்டாள் என்பதை என் கண்கூட பார்த்தேன். எப்படியாவது கடவுள் காப்பாத்திடுவாரு என்ற நம்பிக்கையில் தினமும் கோயிலுக்கு போனாள்.

Advertisement

மீனா கணவர் குறித்து சொன்னது:

கோவிலில் ரொம்ப நேரம் மனமுருகி அழுது கொண்டே இருப்பாள். ஹாஸ்பிடல், கோவில் என்று சுற்றிக் கொண்டே இருந்தார். அவருடைய கணவர் மேல் இருந்த பாசத்தை பார்த்து நான் அசந்து போயிட்டேன். அந்தளவிற்கு ரொம்ப அன்பாக இருந்தார். மீனாவுக்கு பெரிதாக வெளி உலகமே தெரியாது. அவங்க அம்மா அந்தளவிற்கு அவரை வளர்த்தார். சாகர் தான் தைரியமாக எல்லாத்தையும் சமாளிக்க கற்றுக் கொடுத்தார். இப்போது மீனா தன்னம்பிக்கையோடு வாழ்வதற்கு அவர் கணவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம்.

Advertisement

மீனா-மாமியார் உறவு:

இந்த இரண்டு வருடத்தில் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். கணவர் இறந்த பிறகும் மீனா தன்னுடைய மாமியரை நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார். சாகர் ஓட அம்மா டீச்சர். சாகர் ஒரே ஒரு மகன்தான். அவரிடத்தில் இப்போ மீனா தான் மகனாக இருந்து மாமியாரை பார்த்துக் கொள்கிறார். அவருக்கு தேவையான எல்லா விஷயத்தையும் அவர் தான் பார்த்துக் கொள்கிறார். சாகர் அம்மாவால் சரியாக நடக்க முடியாது. மகன் இல்லாத குறை அவர்களுக்கு தெரியவிடாமல் தினமும் 45 நிமிடம் அவருக்காகவே ஒதுக்கிப் போன் பேசுவார். இப்ப வரையும் அவர் மாமியாரை அம்மான்னு தான் கூப்பிடுவார். அவங்க பெங்களூரில் இருக்கிறார்கள். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை மகளோடு போய் மாமியாரை பார்த்துட்டு வந்திடுவாள். கணவர் இல்லாத நிலையிலும் மாமியார் மேல் அதிக அன்போடு இருக்கிறது பெரிய விஷயம் என்று கண் கலங்கி கூறியிருந்தார்.

Advertisement