'நடக்காமல் போன பாலு மகேந்திரா படம்' களவாணி படத்தின் விமல் தங்கையை ஞாபகம் இருக்கா ?

By Rajkumar · 3/10/2021

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் விமலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இந்த படத்தின் முலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். முதலில் இவர் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் சினிமாவில் நடித்து கொண்டே தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்து இருந்தார்.

மேலும், ஒரு முறை இவர் பேட்டியில் எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் படத்தில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்றதால் கோல்டு மெடல் கிடைத்தது. பிறகு கல்லூரியில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றதால் மீண்டும் கோல்டு மெடல் கிடைக்க இருப்பதாக சொல்லி இருந்தார். இவருக்கு விஜய் உடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்பது தான் இவருடைய கனவு என்றும் சொல்லி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் படிப்பை போலவே சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளுடன் போராடி வந்தார் மனீஷா.

பிறகு இவர் சினிமாவில் ஹீரோயினியாக நடிக்க போகிறார் என்ற தகவல் வந்தது. அந்த வகையில் இவர் பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால், பாலுமகேந்திரா மறைந்துவிட மனிஷா உடைய ஆசையும் நிராசை ஆனது. பிறகு இவர் கதாநாயகியாக பல முறை போராடி வந்திருக்கிறார். பின்பு சற்குணத்தின் உதவியாளர் ஒருவர் இயக்கும் கபே என்ற படத்தில் நாயகியாக நடிக்க மனீஷா கமிட்டாகி இருந்தாராம்.

இப்படி ஆறு வருடங்களுக்கு முன் இவர் கபே படத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல் வந்த நிலையில் தற்போது இவர் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆறு வருடங்களாக இவரைக் குறித்து எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் வரவில்லை. மேலும், களவாணி படத்திற்கு பின் வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை. தற்போது இவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

behindtalkies AMP · Quick view
View full