பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி நாளடைவில் திரையில் பிரபலமான நடிகர்களாக பல பேர் வலம் வந்திருக்கிறார்கள். ஷாலினி, மீனா என பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் நடிக்க துவங்கி பிற்காலத்தில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தில் அவரின் தங்கையாக நடித்த இவரும் ஹீரோயினாக வந்திருக்க வேண்டுவது தான். அதுவும் மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திரா படத்தில் தான்.

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் விமலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இந்த படத்தின் முலம் இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். முதலில் இவர் நாணயம், சவாலே சமாளி, நிம்மதி போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.

Advertisement

படிப்பில் கோல்டு மெடல் :

அதற்கு பிறகு இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் சினிமாவில் நடித்து கொண்டே தன் படிப்பிலும் கவனம் செலுத்தி வந்து இருந்தார். மேலும், ஒரு முறை இவர் பேட்டியில் எனக்கு நான்காம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் படத்தில் தேசிய அளவில் அதிக மதிப்பெண் பெற்றதால் கோல்டு மெடல் கிடைத்தது. பிறகு கல்லூரியில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றதால் மீண்டும் கோல்டு மெடல் கிடைக்க இருப்பதாக சொல்லி இருந்தார்.

மனிஷா நடித்த சீரியல்கள் :

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மனிஷா, களவாணி படத்துக்கு பின்னர் ஒரு 10 படம் பண்ணிட்டேன். இந்த லாக் டவுனிலால் தான் எந்த படமும் பண்ணாம இருக்கேன். களவாணிக்கு முன்னும் சரி பின்னும் சரி பல சீரியலில் நடித்து இருக்கிறேன். அதுவும் Avm தயாரிப்பில் மட்டும் 5 சீரியல் பண்ணி இருக்கிறேன். எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. எனக்கு அவர் படத்தில் தங்கையாக நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. அவரை நான் மாமா மாமா என்று கூப்பிட்டு பழகிட்டேன்.

Advertisement

விஜய்யுடன் நடிக்க ஆசை :

அதனால் அவருக்கு தங்கையாக நடித்தால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்பதால் நடிக்கவில்லை.என் அப்பா இருந்தும் இல்லாதது மாதிரி தான். என் அம்மாவிற்கு நான் கலெக்டர் ஆகணும் என்பது தான் ஆசை. எனக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் தான் படிப்பு மற்றும் நடிப்பு இரண்டையும் நன்றாக செய்துவருகிறேன். மேலும், என் படிப்பிற்கு இப்போதைக்கு பலர் உதவி செய்கிறார்கள்.

Advertisement

பாலுமகேந்திரா படத்தில் வாய்ப்பு

அனால், புத்தகங்கள் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், அதையும் நானே சம்பாதித்து பார்த்துக்கொள்கிறேன். இவர் ஹீரோயினியாக நடிக்க போகிறார் என்ற தகவல் வந்தது. அந்த வகையில் இவர் பிரபல இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால், பாலுமகேந்திரா மறைந்துவிட மனிஷா உடைய ஆசையும் நிராசை ஆனது. விரைவில் இவரை ஹீரோயினாகவோ, கலெக்டராகவோ விரைவில் பார்க்கலாம்.

Advertisement