இமைக்கா நொடிகள் அனுரங் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, தற்போது திருமணமாகாமல் கர்ப்பம். அஜித் பட நடிகை.
பாலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யாப். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் பல திரைப் படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த இமைக்கா நொடிகள் படத்தில் ருத்ரன் என்னும் பவர்புல் வில்லன் கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யாப் நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்துப் பெற்று பிரிந்தார்கள். இந்நிலையில் நடிகை கல்கி கோச்லின் அவர்கள் தற்போது கர்ப்பமாக உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் திரையுலகில் நடிகை, நாடகக் கலைஞர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர் நடிகை கல்கி கோச்லின்.
நடிகை கல்கி கோச்லின் அவர்கள் தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். மேலும், இவர் வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.
இவர் திருமணமாகி நான்கு வருடத்தில் இயக்குனர் அனுராக் இடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின் தனியாக தான் வாழ்ந்து வந்தார். தற்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஹெல்ஸ் பர்க் என்பவரை காதலித்து வருகிறார் நடிகை கல்கி கோச்லின். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். அதோடு நடிகை கல்கி கோச்லின் அவர்கள் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதுவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் நண்பர் மூலம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறப்படுகிறது.
நடிகை கல்கி கோச்லின் அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களை செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். நடிகை கல்கி கோச்லின் கர்ப்ப காலத்திலும் கூட நாடக மேடை, நடிப்பு, தயாரிப்புப் பணி, பாட்காஸ்ட் பணி எனத் தொடர்ச்சியாக செய்து வருகிறார். கல்கிக்குத் தன்னுடைய பிரசவம் "வாட்டர் பர்த்" மூலம் நிகழ வேண்டுமென சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.