இயக்குனர் நிவாஸ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கல்லுக்குள் ஈரம். இந்த படத்தில் பாரதிராஜா, அருணா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் நடிகை அருணாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் இருந்து விலகியவர் அருணா. பின் குடும்ப பொறுப்பு, பிசினஸ், வீட்டுத்தோட்டம் என்று தனக்கு பிடித்த வேலைகளை பிஸியாக செய்துகொண்டு வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் இவருடைய வீடு கடல் போன்று பிரமாண்டமாக பறந்து விரிந்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிக்கை அருணாவிடம் பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார், ஸ்கூல் படிக்கும் போதே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்திலேயே 80 படங்களுக்கு மேல் நடித்தேன். பிறகு திருமணம் செய்து கொண்டேன். என்னுடைய திருமணம் காதல் கல்யாணம் தான். நடித்தவரை போதும் என்று குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்தேன். என்னுடைய கணவர் ஃபிட்னஸ் உபகரணங்கள் விநியோகஸ்தராக இருக்கிறார்.

Advertisement

அதனால் அவருடைய பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறேன். அதோடு எங்களுடைய 4 பெண் குழந்தைகளையும் கவனிக்க வேற வேலை அதிகம். அதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. அமெரிக்காவில் உள்ள லைஃப் பிட்னஸ் என்கிற கம்பெனியோட உபகரணங்களை இந்தியாவுக்கான டீலர்ஷிப் எடுத்து இறக்குமதி செய்து பல மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறோம். அதோடு நாங்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் ரிவோக் என்ற பெயரில் பிட்னஸ் சென்டர் நடத்துகிறோம். சரத்குமார் சார், விக்ரம் சார் என பல நடிகர்கள் எங்களுடைய சென்டருக்கு வருவார்கள். எங்கள் இரண்டு கம்பெனியிலும் 500 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்.

இந்த இரண்டு கம்பெனிகளையும் நான் என்னுடைய கணவர், என்னுடைய மூத்த பெண், அவளுடைய கணவர் என குடும்பமாக வனித்துக் கொண்டு வருகிறோம். மேலும், பணியாளர்கள் பலர் இருந்தாலும் எந்த சூழலிலும் சமைக்கிற வேலையை மட்டும் யார்கிட்டயும் கொடுக்க மாட்டேன். எல்லா வகையான உணவையும் நானே சமைப்பேன். உடல் நலம், மன நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பயன் இருக்காது. அதனால் முடிந்த வரை ஆரோக்கியமான காய்கறிகளை எங்க வீட்டு தோட்டத்தில் உற்பத்தி செய்து அதை தான் நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். தினமும் ஒரு முறையாவது என் வீடு முழுக்க தோட்டத்தை சுத்தி பார்த்த பின்னர் தான் அந்த நாளே போகும். அதனால் நட்பு வட்டாரத்தில் இருக்கும் சினிமா பிரபலங்கள் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவார்கள்.

Advertisement

அவர்கள் வீட்டையும், தோட்டத்தையும் தவறாமல் பாராட்டுவார்கள். எங்கள் வீட்டிற்கு தள்ளிதான் பாரதிராஜா, நடிகர் விஜயின் வீடெல்லாம் இருக்கிறது. இரண்டாவது பெண் ஆர்கிடெக்ட், மூன்றாவது பெண் வக்கீல், நாலாவது பெண் எம்பிபிஎஸ் படிக்கிறார்கள். நாலு பேருமே நீ சினிமாவில் நடிக்க விருப்பமில்லையா? நீ மறுபடியும் நடிங்க என்று சொல்வார்கள். ஆனால், வீட்டை கவனிக்க வேண்டும் என்பதால் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இல்லை. வீட்டு நிர்வாகத்தை சரியாக கவனிக்கவில்லை என்றால் அந்த நாளே எனக்கு முழுமையடையாது. அதனாலேயே நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. பாரதிராஜா சார் என்னை படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருக்கிறார். நானும் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்வேன். என்ன நடக்குமோ தெரியாது? பொருத்திருந்து பார்க்கலாம் என்று கூறியிருந்தார். /

Advertisement
Advertisement