கேஜிஎஃப்2, RRR படத்தின் திரைப்படத்தின் வசூல் குறித்து கமலஹாசன் அளித்திருந்த பேட்டி வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங் ஸ்டாராக மிரட்டி இருக்கிறார். ஜெயிலில் இருக்கும் விஜய் சேதுபதியை காப்பாற்ற பகத் பாசில் முயற்சி செய்கிறார். இவர்களின் திட்டத்தை புரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க போராடுகிறார். இதனால் அடுத்தடுத்து நடக்கும் ஆக்ஷன் தான் படத்தின் கதை.

Advertisement

விக்ரம் படத்தின் பாடல் :

சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கே ஜி எஃப் 2 படம் குறித்து கமலஹாசன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Advertisement

கமல்ஹாசன் அளித்த பேட்டி:

சமீபத்தில் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக கமலஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் படம் குறித்து பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அப்போது கேஜிஎப் 2 படத்தின் 1000 கோடி வசூல் குறித்து உங்களுடைய கருத்து என்று கேட்டிருந்தார்கள்? அதற்கு கமலஹாசன் அவர்கள் கூறி இருந்தது, ஒரு படத்தின் தோல்வி என்றால் ஒருத்தரை குறிப்பது அல்ல. ஒரு படம் உருவாகுவதற்கு 200 பேர் முக்கியம். அதில் வெற்றி தோல்விகள் அத்தனை பேருக்குமே பங்கு.

Advertisement

கேஜிஎப் 2 வசூல் குறித்து கமல் சொன்னது:

ஒருத்தர் தவறு செய்து விட்டாலும் அந்த படம் தோல்வி தான். தயாரிப்பாளர்கள் மேல் பழி சொல்ல முடியாது. இது ஒரு சுழற்சி மாதிரி. ரமேஷ் சிப்பி இயக்கிய தங்கப்பதக்கம் படம் பாலிவுட்டில் சக்தி என்ற பெயரில் சூப்பர் ஹிட்டானது. இங்கு நான் நடித்த “Ek Thije Keliye” படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி அடைந்தது. அதேபோல் தான் சினிமாவும் எல்லா மொழிப் படங்களும் வெற்றி அடையும். அந்த வரிசையில் விக்ரம் படமும் இடம்பெறும் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.’

Advertisement