பிரதீப்பை இதனால் தான் பேசவிடவில்லை - கமல் சொன்ன காரணம். கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சீசன் துவங்கியதில் இருந்து பிரதீப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்து வந்தது. எனவே அவரை டார்கெட் செய்து பல விஷயங்களை செய்தனர். இதற்கு ஏதுவாக பிரதீப் பேசிய சில அநாகரிகமான வார்த்தைகளும் சில எல்லை மீறி செயல்களும் அவரது எந்த வெளியேற்றத்திற்கு காரணமாகிவிட்டது.
https://twitter.com/itzsekar/status/1723389059547246704?s=48
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது கூல் சுரேஷ் பிரதீப் தாய் படிக்கும் சொல் ஒன்றே பேசி விட்டதாக சர்ச்சை வெடித்தது இதனால் மற்ற போட்டியாளர்களும் பிரதீப் மீது கடும் அதிருப்தி அடைந்தனர்.எனவே இந்த வாரம் கமல் சாரிடம் இதுகுறித்து முறையிட போவதாக தான் மாயா மற்றும் அவரது குழுவினர் முடிவெடுத்தார்கள். ஆனால், நேற்றைய நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் பிரச்சனைகள் இருந்து விலகி பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வேறு ஒரு புதிய பஞ்சாயத்தை கிளப்பி விட்டார்கள்.
ஆனால், இதுனால் வரை பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அப்படி என்ன நடந்து கொண்டார் என்பதை ஒரு மணி நேர நிகழ்ச்சியிலோ 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியிலோ காண்பிக்கப்படவில்லை. பிரதீப் என்னதான் மோசமாக பேசியிருந்தாலும் அவரை ஒரு உவமனைசராக முத்திரை குத்தி வெளியில் அனுப்பி இருப்பது அவரது எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும் இந்த விஷயத்தில் கமல் கூட யோசிக்காமல் செய்துவிட்டார் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
https://twitter.com/ajofficial08/status/1723386230749138999?s=48
மேலும், கமல் தான் பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்ததாக ஓவ்வொருவாராக உளறி வருகின்றனர். இதுகுறித்து பேசிய பூர்ணிமா ' பிரதீப் செய்ததை எங்களால் சமாளிக்க முடியும். ஆனால், இவர் செய்ததை கமல் சாரால் பொறுக்க முடியவில்லை என்று அவர் தான் அந்த ஆக்ஷன் எடுத்தார். கூல் சுரேஷ் அண்ணாவை பிரதீப் இப்படி பண்ணன்னு தான் ரெட் கார்ட் தூக்கினேன். ஆனால், அவங்க Red Card கொடுத்தது Women Safetyகாக என்று கூறியுள்ளார். மேலும், ரவீனா பேசுகையில் ' அவன் Unsafe என்று சொல்லவில்லை Uncomfortable என்று மட்டும் தான் சொன்னோம்' என்றும்கூறி இருந்தார்.
பிரதீப்பின் Red Card விஷயத்தில் Bully Gang மீது ஒரு விமர்சனம் இருந்தாலும், பிரதீப் தரப்பு நியாயத்தை கமல் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய கமல் 'பிரதீப்பிற்கு அவரது தரப்பை முன்வைக்க வாய்ப்பு தரவில்லை என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால் நான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். ஆனால், தன்னுடைய தவறுகளுக்கு வருந்துவதோ காரணம் சொல்வதோ இல்லாமல் மற்றவர்கள் செய்ததுதான் மிகப்பெரிய தவறு என்று கூறினார்.
https://twitter.com/_introvertboy__/status/1723387465703264591?s=48
மேலும், இன்னொரு இடத்தில் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வாரோ என்று எனக்கு தோன்றியது. நான் நான்கு வயதில் இருந்து இப்படித்தான் இருக்கிறேன், இன்னமும் இப்படித்தான் இருப்பேன் என்று கூறி தனக்கான குழியை இன்னும் ஆழமாகதான் வெட்டிக் கொள்ளப் போகிறாரோ என்பதால் தான் சரி போதும் விட்ருங்க என்று சொன்னேன். அது அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான்' என்று கூறியுள்ளார்.