'தலைவர் 173' படத்தில் இருந்து சுந்தர்.சி விலக இது தான் காரணம் - உண்மையை போட்டுடைத்த கமல்ஹாசன்

By subhashini · 15/11/2025

தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். இவர் தன்னுடைய திரை பயணத்தில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து ரஜினி அவர்கள் தன்னுடைய அடுத்த அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் ரஜினிகாந்துடைய 173 வது படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்குகிறார் என்றும் கமலஹாசன் தான் அந்த படத்தை தயாரிக்கிறார்கள் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வெளியானது.

ரஜினியின் சூப்பர் ஹிட் ஆன அருணாச்சலம் படத்தை சுந்தர் சி தான் இயக்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி- ரஜினி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்திருந்தது. கோலிவுட் வட்டாரத்தில் இதைப் பற்றி எல்லாம் நிறைய செய்திகள் வந்தது. மேலும், இது தொடர்பாக ரஜினி- கமல்- சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

தலைவர் 173 படம்:

மேலும், ரஜினியின் 'தலைவர் 173 'படத்தில் இருந்து சுந்தர் சி விலகிருக்கும் செய்தி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சுந்தர் சி வெளியிட்ட அறிவிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி உடைய தலைவர் 173 படத்தில் இருந்து நான் விலகுகிறேன். கனத்தை இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமே நடந்து விடுவதில்லை.

https://www.youtube.com/watch?v=5vmAqv7GXWY

விலகிய சுந்தர்.சி:

கடந்த சில நாட்களாக இந்த படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டதை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவையெல்லாம் உறுதுணையாக இருக்கும். இருந்தாலுமே தலைவர் படத்திலிருந்து நான் விலகுவது ரொம்ப கஷ்டமான முடிவுதான். இந்த முடிவு கட்டாயம் ஏற்பட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பு அளித்த அன்பிற்கும் நன்றி. அதோட என்னுடைய மதிப்பையும் அனைவரிடம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

https://www.youtube.com/watch?app=desktop&v=A2XMpktL1C8

கமல் பேட்டி:

இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கமலிடம், ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு கமல், இந்த படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது தொடர்பாக அவரே சொல்லிவிட்டார். அதற்குப் பிறகு எப்படி மூவரும் இணைய முடியும். என்னை பொறுத்தவரை நான் இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் தான். என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை தான் நான் எடுக்க முடியும். அதுதான் நல்ல விஷயம். ரஜினிக்கு பிடிக்கும் வரை நாங்கள் கதையை கேட்டுக் கொண்டுதான் இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி
நடிக்கும் படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் சுந்தர்.சி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full