அஜித் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல். வைரலாகும் புகைப்படம். எந்த படத்தின் போது தெரியுமா ?

By Rajkumar · 25/4/2020

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு 'தல' என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த 'அமராவதி' என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 'பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்' போன்ற பல படங்களில் நடித்தார் 'தல' அஜித்.

'தல' அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் 'தல' அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் 'வலிமை'. ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.

தற்போது, அஜித் நடித்த ஒரு ஹிட் படத்தின் ஃபங்க்ஷனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. 2000-யில் வெளி வந்த தமிழ் திரைப்படம் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்'. இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். இதில் 'தல' அஜித்துடன் இணைந்து மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'மெகா ஸ்டார்' மம்மூட்டி நடித்திருந்தார்.

அஜித்துக்கு ஜோடியாக தபுவும், மம்மூட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யும் நடித்திருந்தனர். மேலும், முக்கிய வேடங்களில் அப்பாஸ், மணிவண்ணன், ஸ்ரீ வித்யா, ரகுவரன், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு 'இசைப் புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இவ்விழாவில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான 'உலக நாயகன்' கமல் ஹாசன் கலந்து கொண்டாராம்.

behindtalkies AMP · Quick view
View full