இந்தியன் படத்துல அந்த பாட்டு முதல்ல எனக்கு புடிக்கல. ஆனால், அதுக்கப்புறம் - நேரலையில் சொன்ன கமல்.
தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர். தற்போது கமலஹாசன் அவர்கள் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சில ஆண்டு காலமாக நீடித்துக் கொண்டே போவதால் கமலஹாசன் அவர்கள் "தலைவன் இருக்கின்றான்" என்ற தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இந்த படத்தை இவர் தன்னுடைய சொந்த நிறுவனத்தில் தயாரிக்கிறார். லாக்டோன் நாட்களாக இருந்தாலும் இவர் இந்த சமயத்திலேயே படத்தின் நடிகர்களின் ஒப்பந்த வேலைகளை தொடங்கிவிட்டார்.
தலைவன் இருக்கிறான் படத்தில் இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமானை கமிட் செய்திருக்கிறார்.1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் தலைவன் இருக்கிறான் படம் என்று பேசப்படுகிறது. தேவர் மகன் படத்தில் ஜாதிகள் மையமாக இருந்தது. ஆனால், தலைவன் இருக்கின்றான் படத்தில் அரசியலை மையமாக வைத்து இருக்கிறார்கள். தேவர் மகன் படத்தில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைவன் இருக்கிறான் படத்தின் முன்னோட்டமாக சமீபத்தில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கமல் நேரலையில் உரையாடினார்கள். இந்த நேரலையின் போது நடிகர் கமலஹாசனும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் எண்ணற்ற பிளாஷ்பேக் குறித்து பேசி இருந்தார்கள். அப்போது கமலிடம் ஏ ஆர் ரகுமான் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த கமல் ரகுமான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக்கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது.
https://twitter.com/arrahman/status/1271406571214393349
இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறிப் போயாச்சு பாடல் முதலில் கேட்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. இதனை நான் இயக்குனரிடம் சொன்னேன். ஆனால் அந்த படத்தின் சூட்டிங் போது அந்த பாடல் வேற லெவல் இருந்தது. எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரஹ்மானும் ஒருவர் இந்தியன் படத்தின் பாடலை மிஞ்சும் அளவுக்கு தலைவன் இருக்கிறான் பாடல் உருவாகும் அப்படி இல்லை என்றால் இருவரும் மீண்டும் இணைந்து ஆல்பம் ஒன்றை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார் கமல்.