அட்லி படம் என்றாலே காப்பி என்ற சர்ச்சைக்கு பத்திரிக்கையாளர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். இதன் மூலம் அட்லீ அவர்கள் தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்ந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். அதோடு அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

Advertisement

ஜவான் படம்:

மேலும், இந்த படம் அதிரடி, ஆக்சன் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜவான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே அட்லீ படம் என்றாலே காப்பி என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்து இருக்கிறது.

அட்லீ படங்கள் காப்பி:

ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. தற்போது ஜவான் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த பேரரசு படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. இப்படி அட்லீ இயக்கிய எல்லா படங்களும் காப்பி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அட்லி படங்கள் குறித்து பத்திரிகையாளர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement

அட்லீ படம் குறித்து சொன்னது:

அதில் அவர், அட்லி எடுத்த மெர்சல் படத்தை பார்த்து 5 ஸ்டார் கதிரேசன் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார். ரஜினி நடித்த மூன்று முகம் படத்தினுடைய காப்பி என்று கொந்தளித்து அவர் மீது புகார் அளிக்க இருந்தார். பின் பேசி சமாதானம் செய்து விட்டார்கள். படம் வெளியானவுடன் கமல் பார்த்துவிட்டு யார் இந்த படத்தை எடுத்தது என்று கோபத்தில் கேட்டார். அட்லீ என்று சொன்னவுடன் அவரை அவரை வந்து சந்திக்க சொல்லுங்கள் என்று சொன்னார். பின் அட்லி, விஜய் இருவருமே கமலஹாசனை சந்திக்க சென்றிருந்தார்கள்.

வீடியோவில் 12 : 12 நிமிடத்தில் பார்க்கவும் :

Advertisement

கமல் சொன்னது:

அப்போது கமலஹாசன் எதுவுமே இதைப்பற்றி பேசவில்லை. அவர்கள் மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அவர்களுக்கு பின்னால் அபூர்வ சகோதரர்கள் போட்டோ இருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள், அபூர்வ சகோதரர்கள் படத்தின் காப்பி தான் மெர்சல் என்று விமர்சிந்து அட்லீயை கூறியிருந்தார்கள். கமல் சொல்லாமல் அட்லீயை திட்டி இருந்தார். அதேபோல் தெறி படம் சத்ரியன் படத்தின் காப்பி தான். விஜயகாந்த் பயங்கர டென்ஷன் ஆகிவிட்டார். பிறகு விஜய்க்காகவும், எஸ் ஏ சந்திரசேகர் ஆகவும் அவர் அமைதியானார். இப்படி அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே காப்பி செய்யப்பட்டது தான் என்று கூறி இருக்கிறார்.

Advertisement