யாரும் எதிர்பாராத வகையில் பிராங்க் செய்து இந்த வார எலிமினேஷனை அறிவித்த கமல்.! ரசிகர்கள் ஆராவாரம்.!

By Rajkumar · 13/7/2019

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள்கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பி வந்தனர்.

மற்றொரு புறமோ வனிதா வெளியேறி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் போய்விடும் என்பதால் வனிதா இருக்க வேண்டும் என்றும் கூறிவந்தனர். மேலும், இந்த வார நாமினேஷனில் இருந்து மோகன் வைத்யா வெளியேற போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால், இந்த இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய ட்விஸ்டை கொடுத்துள்ளனர். இந்த வாரம் நாமினேஷனிலிருந்து அனைவரும் எதிர்பார்த்து போலவே வனிதா வெளியேற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிலும் வனிதாவை கமல் வாங்கு வாங்குனு வாங்கியுள்ளாராம்.

இந்த வார நாமினேஷனை கமல் ஒரு பிராங்க் போல செய்து அனைவரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளாராம். அதே போல இந்த வாரம் வனிதாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய தர்ஷனை கமல் பாராட்டினாராம். மேலும், மோகன் வைத்யாவாயும் கமல் பாராட்டியுள்ளார். மேலும், கமலுக்காக சாண்டி ஒரு பாடல் ஒன்றை கூட பாடி டெடிகேட் செய்தாராம்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full