உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் வெகு காலமாக நடித்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் இன்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் ஹிந்தி சினிமா பிரவேசம் மாட்டும் 1981ஆம் ஆண்டு தொடங்கி 1985ஆம் ஆண்டிலேயே முடிவடைந்தது விட்டது. அதற்கு பிறகு அவ்வை சண்முகி திரைப்படத்திம் ஹிந்தி ரீமேக்காண சாட்சி 420 என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

கமல்ஹசன் தன்னுடைய தனித்தன்மையான நடிப்பினால் சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து இன்று வரை தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் கன்னடத்தில் 1978ஆம் ஆண்டு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருந்த மரோ சரித்திரா திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் இந்த படம் ரீ மேக் செய்யப்பட்டது.

Advertisement

ஆனால் ஹிந்தி சினிமாவில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படம் ஏக் துஜே கே லியே என்ற பெயரில் சில மாற்றங்களுடன் வெளியாகியிருந்தது. மேலும் இப்படத்தில் நடிகை சரிதாவுக்கு பதிலாக ஹிந்தி நடிகை ரதி அக்னிகோத்ரியை நடிக்க வைத்தார் பாலசந்தர். இப்படமும் பெரிய அளவில் ஹிந்தியில் ஹிட் அடிக்கவே அடுத்த படத்தில் கமலஹாசன் மற்றும் ரதி அக்கினிகோத்திரி ஜோடியாக “தேக்கா பியார் தும்கார” என்ற படத்தில் நடிக்க சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் போட்டது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்திருந்த நடிகை ரதி அக்னிகோத்ரி ஏக் துஜே கே லியே படத்தில் இயக்குனர் பாலசந்தர் தனக்கு குறைவான காட்சிகள் மட்டுமே கொடுத்தார் என கூறியிருந்தார். மேலும் அவரது தந்தையும் பாலசந்தர் மீது குற்றம் சாட்டினார். இப்படியிருக்குபோது கமலஹாசனுக்கு பாலசந்தர் குரு என்பதினால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமல் பின்னர் அந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்தது.

Advertisement

இதற்கு பிறகு “தேக்கா பியார் தும்கார” திரைப்படம் பாதியில் நின்று போகவே கமல் மற்ற படங்களில் நடித்தார் இப்படி சில காலங்கள் போகவே தயாரிப்பு நிறுவனத்தில் செய்த ஒப்பந்தம் காரணமாக மீண்டும் கமலும் நடிகை ரதியும் நடிக்க வேண்டியதாகியது. கடைசியில் 1985ஆம் ஆண்டு “தேக்கா பியார் தும்கார” படம் திரையில் வெளியாகியது. இதற்கு பிறகு நடிகை ரதி அக்னிகோத்ரி அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் இயக்குனர் பாலசந்தர் பற்றி தவறாக எதுவும் கூறவில்லை, கமலஹாசன் தான் இடையில் என்னிடம் சண்டை போட்டார் என்று கூறியிருந்தார்.

Advertisement

ஆனால் கமல்ஹசன் தன்னுடைய முடிவில் உறுதியான இருந்தார். இந்த நிலையில் 1985ஆன் ஆண்டு வெளியான இப்படத்திக்கு பிறகு நடிகர் கமலஹாசன் வேறு ஹிந்தி படங்களில் நடிக்கவில்லை அதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான காரணம். அதற்கு பிறகு 13 வருடங்கள் கழித்து கமல் மற்றும் நடிகை மீனா நடித்திருந்த அவ்வை சம்முகி படத்தின் ஹிந்தி ரீ மேக்கான சாட்சி 420 படத்தில் தான் கடைசியாக கமலஹாசன் நடித்திருந்தார்.

Advertisement