தமிழகத்தில் வருகின்ற 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தல் களம் காணவுள்ளனர். இதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் கமல். மேலும், இந்த தேர்தலில் வெற்றி பெற சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளையும் நடத்தி வருகிறார் கமல். அந்த வகையில் கடந்த 27/2/2021 அன்று மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அதேபோல் சட்டபஞ்சயாத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருந்தது.

கமலின் கட்சியில் இணைந்த  பொன்ராஜ் பேசுகையில் கடந்த மூன்று ஆண்டுகாலமாக ரஜினிகாந்துடன் இணைந்து அறிவார்ந்த தமிழகத்தை உருவாக்க, கொள்கை உருவாக்கத்தில் பணியாற்றினேன். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவர் அரசியலுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அந்த நேரத்தில் கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். ‘கலாம் வீட்டில் இருந்துதான் நான் கட்சியே ஆரம்பித்தேன். எனவே நீங்கள் வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement

மேலும், இந்த நிகழ்ச்சியின் போது பேசிய கமல்ஹாசன் , ”முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவராக டாக்டர் மகேந்திரனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அதேபோல் இவரையும் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கலாம் என்ற பெயரைத் திருப்பிப்போட்டால் கிட்டத்தட்ட  என் பெயரும் வரும் என்று கூறியிருந்தார். தற்போது இந்த விஷயம் தான் பெரும் கேலிகளுக்கும் உள்ளாகியுள்ளது. ஆனால், கலாம் பெயரை மாற்றி போட்டால் என் பெயர் வரும் எனக் கூறியதை பல செய்தி ஊடகங்களில் திருப்பி போட்டால் என்று கூறியதால் அது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. அதை வைத்து பல ட்ரோல் மீம்கள் வெளியாகி வருகிறது.

Advertisement

அதிலும் ஒரு சிலர் கலாம் பெயரை திருப்பிப் போட்டால் என் பெயர் வரும் – கமல் மல்லாக்க, குப்புற, சைடுவாக்குலனு எப்படி திருப்பிப் போட்டாலும் வரலையே ஆண்டவரே. என்று ட்ரோல் செய்து உள்ளார். அதே போல பல்வேறு மீம்களும் வந்து கொண்டு இருக்கிறது.

Advertisement
Advertisement