தக் லைஃப் படத்துக்கு கர்நாடகாவில் தடை, நீதிமன்றத்திற்கு சென்ற கமல்ஹாசன் - நடந்தது என்ன?

By subhashini · 3/6/2025

கர்நாடக நீதிமன்றத்தில் கமல் வழக்கு பதிவு செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார். அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். அதனால் தான் உயிரே உறவே தமிழே என்று பேச தொடங்கினேன். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். இப்படி கமலஹாசன் பேசியிருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. காரணம், தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று அவர் கூறியிருப்பார். இதனால் கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் வெடித்திருக்கிறது.

தக் லைஃப் படம்:

கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட தீவிர கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக கன்னட ரக்ஷனா வேதிகே தலைவர், கன்னடா தமிழுக்கு பிறகு பிறந்ததாக கூறியிருக்கிறார். உங்களை நான் எச்சரிக்கிறேன். உங்களுக்கு கர்நாடகாவில் தொழில் வேண்டுமா? இருந்தும் கன்னடத்தை அவமதிப்பீர்களா? இதே நீங்கள் கர்நாடகாவில் இருந்திருந்தால் உங்கள் மீது கருப்பு மை வீச தயாராக இருந்திருப்போம். கர்நாடகாவுக்கும் மாநில மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறி இருந்தார்.

கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:

இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சில அமைப்புகள் அழைப்பும் விடுத்திருக்கின்றது. மேலும், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கமலஹாசன், அரசியல்வாதிகளுக்கு மொழியை பற்றி பேசும் கல்வி தகுதி கிடையாது. என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். இந்த ஆழமான விவரங்களை வரலாற்று ஆசிரியர்கள், மொழியியல் வல்லுநர்கள், அகழ்வாராய்ச்சிகளிடம் விட்டுவிடலாம்.

கமல் தொடர்ந்த வழக்கு:

நான் சிவா அண்ணாவிடம் அன்பின் அடிப்படையில் தான் பேசினேன். இது ஒரு பதில் அல்ல, விளக்கம். அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று கூறி இருந்தார். இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் கமலஹாசன் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அதில் அவர், என்னுடைய தக் லைப் படத்தை வெளியிட
கர்நாடக அமைப்பு மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது.

https://www.youtube.com/watch?v=3E1VXkHOEWs

மனுவில் சொன்னது:

திரையரங்குகளில் படம் தங்கு தடை இன்றி வெளியாக வேண்டும். போதுமான பாதுகாப்பும் வழங்க வேண்டும். மாநில காவல் துறை தலைவர் மற்றும் நகர காவல் ஆணையருக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த வழக்கு கூடிய சீக்கிரமாக விசாரணைக்கு வந்து சில நாட்களிலேயே தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.ஒருபுறம் ரசிகர்கள் தக் லைப் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் கன்னட அமைப்பு மொழி எதிர்ப்பு, போராட்டம் என்று சென்று கொண்டிருக்கிறது. இதனால் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுமா? இல்லையா? என்பது நீதிமன்ற தீர்ப்பில் தான் தெரிய வரும்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full