கமல்ஹாசனை மிரட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் - போலீசில் மக்கள் நீதி மய்யம் அளித்த புகார்

By subhashini · 11/8/2025

கமல்ஹாசனுக்கு துணை நடிகர் கொலை மிரட்டல் விடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார்.

இவர் சினிமாவை தாண்டி பொது சேவையும் செய்து வருகிறார். இவர் பல வருடமாக அகரம் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அகரம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் சூர்யா. 2006ஆம் ஆண்டு முதல் இவர் சமூக சேவையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். ஏழ்மையால் கல்வி கற்க முடியாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்காக இவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவி செய்து வருகிறார்கள்.

கமல் சொன்ன விஷயம்:

சில மாதங்களுக்கு முன் சென்னை தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. மேலும், சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி பிரம்மாண்டமாக நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவரும் ஆன கமலஹாசன் பங்கேற்று சிறப்புரை ஆற்றியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=2O6KM8BsABs

ரவிச்சந்திரன் சொன்னது:

அப்போது நிகழ்வில் கமலஹாசன், சனாதனத்தை பற்றி எல்லாம் பேசி இருந்தார். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் யூடியூபில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், கமலஹாசன் சங்கை அறுத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி எல்லாம் இருந்தார். இந்நிலையில் நடிகர் ரவிச்சந்திரன் பேசியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)

போலீசில் புகார்:

பின் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் மௌரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் ஆகியோர் காவல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் துணைத் தலைவர் மௌரியா, சென்னையில் நடந்த சூர்யாவின் அகரம் நிகழ்ச்சியில் கமலஹாசன் கலந்து கொண்டு சனாதனம் குறித்து பேசி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். கமலஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறோம். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full