கமலின் 'விக்ரம்' பட டீஸர் ஹாலிவுட்டின் காபியா - இந்த வீடீயோவ நீங்களே பாருங்க.

By Rajkumar · 8/11/2020

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான 'கைதி'யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைத்து 'மாஸ்டர்' இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

https://www.youtube.com/watch?v=NXSigiaZ0W0&feature=emb_title

இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது. இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று (அக்டோபர் 7). இந்த படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=DgJYcmHBTjc&feature=emb_title

நேற்று வெளியான இந்த படத்தின் டீஸர் வீடியோவில் கமல் அரசியல் வாதிகள், போலீஸ் ஆபீசர்களை அழைத்து கறி விருந்து போட்டு கொள்ளுவது போல படு மாஸான வீடீயோவாக அமைந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் டீஸர் மெக்ஸிகோ 2 : அமெரிக்கன் டிவி சீரிஸ்ஸை பார்த்து அப்படியே காப்பி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.மேலும் , இந்த இரண்டு டீசரையும் பார்த்தால் ஒரே மாதிரி இருப்பதை போல தான் தெரிகிறது.

behindtalkies AMP · Quick view
View full