"உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா? கமல் ஹாசன் சந்திப்பு பற்றி ஹரிஷ் கல்யாண் சொன்னது
தேசிய விருது வாங்கிய பார்க்கிங் படக்குழுவை கமல்ஹாசன் வாழ்த்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வருடம் வருடம் இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இதை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் தொடங்கி இருந்தார்கள். தற்போது 71 ஆவது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற இருக்கிறது. இன்று 71வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசிலக்கப்பட்டு இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட படங்களுக்கு தான் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிறந்த நடிகராக ஜவான் படத்திற்காக ஷாருக்கான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கானுக்கு இதுதான் முதல் முறைதேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சிறந்த படமாக 12th பைல் படம் தேர்வு செய்யப்படுகிறது.
71வது தேசியவிருது:
சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகி இருக்கிறார். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தின் பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி பிரகாஷ் பெற்றிருக்கிறார். இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்தது வாத்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பார்க்கிங் படம் பிடித்து இருக்கிறது. அதோடு பார்க்கிங் படம் சிறந்த திரைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.
கமல்ஹாசன் வாழ்த்து:
பின் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் எம்.எஸ் பாஸ்கர் பெற்றிருக்கிறார். மொத்தம் மூன்று விருதுகளை பார்க்கிங் படம் பெற்று இருக்கிறது. மூன்று விருதுகள் பெற்றிருப்பதால் பார்க்கிங் படக்குழு மகிழ்ச்சியிருக்கிறார்கள். இதையடுத்து தேசிய விருது வென்றவர்களுக்கு கமலஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பின் பார்க்கிங் பட குழு இயக்குனர் ராம் குமார், ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்ட பலரை சந்தித்து கமல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
ஹரிஷ்கல்யாண் பதிவு:
இந்நிலையில் கமலஹாசன் உடனான சந்திப்பு குறித்து பார்க்கிங் பட நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், விருதே வாழ்த்திய தருணம் என்று நினைக்கிறேன். ஒரு நண்பர் போல கமலஹாசன் சார் என்னிடம் பேசினார். உரையாடலா அல்லது யுனிவர்சிட்டி படமா? கற்றது பல உங்களிடம் இருந்து கற்க வேண்டும். மிக சிறந்த புத்தகத்தைப் படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடைபெற்ற பொழுது இருந்தது.
கமல் பற்றி சொன்னது:
எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி கமலஹாசன் சார். லவ் யூ சார் என்று கூறி இருக்கிறார். இதை அடுத்து படத்தின் இயக்குனர் ராம்குமார், லெஜென்டரி கமலஹாசன் சார் பாராட்டியும் மதிப்புமிக்க கருத்துகளையும் பெற்றதில் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்கள் பார்க்கிங் பட குழுவிற்கு அவர் அளித்த அன்பான வார்த்தைகள் எங்களுக்கு ரொம்ப மன உறுதி அளித்திருக்கிறது. இது ஒரு மறக்க முடியாத தருணம் என்று கூறியிருக்கிறார்.