ரோபோ சங்கர் பேரனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன் , நெகிழ்ச்சியில் இந்திரஜா பதிவு - என்ன பெயர் தெரியுமா?

By subhashini · 23/3/2025

இந்திரஜா-கார்த்திக் தம்பதியின் மகனுக்கு கமலஹாசன் பெயர் வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். இவர் குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலமும் தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். முதலில் இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் தான் பங்கேற்றார். அதன் பின் தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோலில் நடித்து இருக்கிறார். இதனிடையே 2002 ஆம் ஆண்டு நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒரு மகள் இந்திரஜா. இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகஅறியப்பட்டார் என்று சொல்லலாம்.

ரோபோ ஷங்கர் மகள்:

முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பிரபலங்கள் பலருமே பாராட்டி இருந்தார்கள். அதற்குப் பின் இவர் ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கியிருந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருந்தார். ஆனால், இவரால் இறுதிவரை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்திரஜா- கார்த்திக் திருமணம் :

இதற்கிடையே, இந்திரஜா தனது முறை மாமா கார்த்திக்கை திருமணம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார். அவர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பி ஆவார். இவர்கள் இருவரின் திருமணம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருந்தார்கள். இவர்கள் திருமண புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரல் ஆகி இருந்தது. அதைத்தொடர்ந்து இவர்கள் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு பகிர்ந்து இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)

இந்திரஜா குழந்தை:

அதன் பின் இந்திரஜாவிற்கு கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்கள் கலந்து கொண்டு இந்திரஜாவிற்கு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர். இதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் தான் இந்திரஜா-கார்த்திக் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த செய்தியை சந்தோஷமாக கார்த்திக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இதற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by தொடர்வோம் கார்த்திக் (@dr.thodarvom_karthick)

இந்திரஜா குழந்தை பெயர்:

இப்படி இருக்கும் நிலையில் இந்திரஜா- கார்த்தியின் குழந்தைக்கு நடிகர் கமலஹாசன் பெயர் வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திரஜா- கார்த்திக் தம்பதிகள் தங்களுடைய குழந்தையுடன் கமலஹாசனை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார்கள். கமல்ஹாசன், “நட்சத்திரன்” என்று இந்திரஜா குழந்தைக்கு பெயர் வைத்திருக்கிறார். தற்போது இது தொடர்பாக இந்திரஜா போட்ட பதிவில், எங்களுடைய வாழ்க்கையின் அர்த்தமான எங்கள் மகனுக்கு உலக நாயகன், நம்மவர், அன்பு தலைவர், பத்ம பூஷன் Dr. கமல் ஹாசன் அவர்கள் தம்பிக்கு “நட்சத்திரன்” என பெயரிட்டு வாழ்த்தினார் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full