திருமணமான முதல் நாளே எனக்கு அது தெரிஞ்சது- வாணி கணபதி உடனான விவாகரத்து பற்றி கமல் சொன்னது
வாணி கணிபதி உடனான விவாகரத்து பற்றி கமல் அளித்து இருந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கமல்ஹாசன். இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். மேலும் இவர் நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகப் கொண்டவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்ன பல மொழிகளில் நடித்து இருக்கிறார். இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்படி 60 ஆண்டுகளுக்கு மேலாக இவர் திரை உலகில் பயணித்து வருகிறார். தற்போது இருக்கும் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் கமல் நடித்து கொண்டு வருகிறார், மேலும், கமல்ஹாசன் தனது கேரியரில் வெற்றி பெற்றாலும், திருமண வாழ்க்கை அவருக்கு கை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கமல்ஹாசன் திருமணம்:
நடிகர் கமல்ஹாசன் தனது திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். முதலில் இவர் நடன கலைஞரான வாணி கணபதியை தான் திருமணம் செய்து கொண்டார். கோலிவுட்டில் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வாணி கணபதி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கமல்ஹாசன் நடித்திருந்தார். பின் இருவரும் காதலித்து 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் கமல்ஹாசனுக்கு ஆடை வடிவமைப்பாளராக வாணி கணபதி மாறினார்.
கமல் பேட்டி:
கடைசியில் இவர்களது திருமணம் 1988 விவாகரத்தில் முடிந்தது. நடிகர் கமல்ஹாசன், வாணி கணபதியை திருமணம் செய்து கொண்ட போதும், நடிகை சரிகா உடன் உறவில் இருந்தாராம். அதனால் தான் வாணி கணபதியுடன் விவாகரத்து ஆனதாக கூறப்பட்டது. அதே ஆண்டு கமல்ஹாசன், சரிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில காரணங்களால் 2004ஆம் ஆண்டு இவர்கள் பிரிந்தனர். இந்த நிலையில் வாணி கணபதியை விவாகரத்து செய்த பிறகு அளித்த பேட்டியில் கமல், எனக்கு அந்த திருமணத்தில் மகிழ்ச்சியே கிடைக்கவில்லை. குறைந்தபட்ச சந்தோசம் கூட அதில் இல்லை.
விவாகரத்துக்கு காரணம்:
நான் பொய் சொல்லவில்லை. அந்த வாழ்க்கை ரொம்ப கொடுமையாக இருந்தது. நான் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தேன். திருமணம் தின் மீது எனக்கு நம்பிக்கையே இல்லாமல் போனது. நான் எப்பொழுதும் சத்தமாக பேசுவேன். எனக்கு திருமணம் ஆன முதல் நாளே அது செட் ஆகாது என்று அவர் சொன்னார். அப்போதே எனக்கு வருத்தத்தை கொடுத்தது. பின் வானியுடன் விவாகரத்து கிட்டத்தட்ட திவாலாக்கும் விளிம்பில் என்னை கொண்டு சென்றது என்றெல்லாம் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாணி கணபதி, நாங்கள் விவாகரத்து பெற்று 28 ஆண்டுகள் ஆகிவிட்டது.
வாணி கணபதி பேட்டி:
நான் இதைப் பற்றி எப்போதுமே பேசியது கிடையாது. காரணம், இது ஒரு தனிப்பட்ட விஷயம். ஆனால், அவர் ஏன் வெறிபிடித்த மனிதனைப் போல நடந்து கொள்கிறார்? என்று புரியவில்லை. உலகில் எந்த நீதிமன்றத்தில் ஜீவானந்தம் ஒருவரை திவாலாக்கும் நிலைக்குத் தள்ள அனுமதித்திருக்கிறது? அவர் சொன்னதை கேட்டு அவர் சொன்னநாங்கள் ஒன்றாக இருந்த போது பயன்படுத்திய பொருள்களை கூட எனக்கு அவர் கொடுக்க மறுத்து விட்டார். அத்தகைய மனிதரிடம் நான் என்ன எதிர்பார்க்க முடியும்? அவர் சொன்னதை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன் என்று கூறியிருந்தார்.