ரோபோ புனைபெயர் தான், அந்த அகராதியில் - தனது தீவிர ரசிகன் ரோபோ ஷங்கர் குறித்து கமல் உருக்கம்
நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். டிவி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
https://www.youtube.com/watch?v=EmwNzQT6Bcs
அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்தார். இதற்கிடையிலே நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் அவஸ்தை பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் குடிக்கு அடிமையாகி இருந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் இவருடைய உடல்நலம் ரொம்பவே பாதிக்கப்பட்டு மெலிந்து போயிருந்தார். பின் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார்.
ரோபோ சங்கர் உடல்நிலை:
அதற்குப்பின் இவர் பழைய நிலைமைக்கு மாறி சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கர் சென்னையில் சினிமா சூட்டிங் ஒன்றில் கலந்துகொண்டு நடித்து இருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு நீர் சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்திருந்தார். இதனால் பதறிப் போன பட குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருந்தார்கள்.
ரோபோ சங்கர் இறப்பு:
மேலும், சிகிச்சை முடிந்து இவர் வீடு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று இவரை icuவில் அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்து வந்திருந்தார்கள். இருந்துமே சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ரோபோ சங்கர் உயிரிழந்திருக்கிறார். இவருடைய இழப்பு பலருக்குமே பேரதிர்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலருமே ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகரும், எம்பியுமான கமலஹாசன், ரோபோ சங்கரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
ரோபோ சங்கர்
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
கமல் பதிவு:
அதில் அவர்,
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே என்று கூறி இருக்கிறார்.