என் வாழ்வில் அவர் செய்ததை மறக்கவே முடியாது-இயக்குனர் கே.பாலச்சந்தரின் பிறந்த நாளில் கமல் பதிவிட்ட வீடியோ

By subhashini · 9/7/2024

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு கமலஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்தவர் கே.பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகம் கொண்டு இருந்தார்.

இவர் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த 'நீர்க்குமிழி' என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொடுத்திருந்தார். கடைசியாக இவர் 'பொய்' என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 100 படங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தார்.

கே.பாலச்சந்தர் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருந்தார். திரை உலகினர் மத்தியில் மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் 'இயக்குனர் சிகரம்' என்று கே.பாலச்சந்தர் அழைக்கப்படுகிறார். இவர் தன்னுடைய படைப்பிற்கு 9 தேசிய விருதுகள், 12 பிலிம் பேர் விருதுகள், தாதா சாகிப் பால்கே விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளை வாங்கி இருந்தார்.

கே.பாலச்சந்தர் குறித்த தகவல்:

அதோடு இவருடைய படைப்புகள் மட்டுமில்லாமல் இவர் உருவாக்கிய பிரபலங்களும் இன்று தமிழ் சினிமா உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரு பெரும் பட்டாளத்தையே கே.பாலச்சந்தர் உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக இவருடைய செல்லப் பிள்ளைகளாக ரஜினிகாந்த், கமலஹாசன் வலம் வந்தவர்கள். இந்த நிலையில் இன்று மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்திரனின் பிறந்த நாள்.

கமல்ஹாசன் வீடியோ:

இதற்கு பிரபலங்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் கே.பாலச்சந்தர் உடைய நினைவை கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் அவரைப் பற்றி பேசாத நாளே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தை கொண்டு வந்தவர் என்பதற்காக மட்டும் நான் அவரை போற்றவில்லை. தனக்கு பயனில்லை என்றாலும் என்னைப் போல் பல நட்சத்திரங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.

கே.பாலச்சந்தர் பிறந்த நாள்:

அந்தளவிற்கு விடா முயற்சியாக புதுமைகளையும், புது முகங்களையும் அறிமுகப்படுத்திய இயக்குனர். இந்த அளவிற்கு எந்த இயக்குனரும் செய்யவில்லை. என்னை போல் பல கலைஞர்களை உருவாக்கி எங்களுடனே இருக்கிறார். இந்த துறையில் நான் 60 வருடங்கள் பயணித்திருக்கிறேன். என்னுடன் அவர் பயணிக்காமல் இருந்தாலும் அவருடைய பெயர் விடுபடாது. இன்று அவருக்கு பிறந்தநாள். எங்களுக்கு துறையில் அறிவு வளர்த்த நாள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full