எனக்கு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா - வேதனையில் நடிகர் கமல்ஹாசன் சொன்னது
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவிற்கு கமல்ஹாசன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் சரோஜாதேவி. இவர் கன்னடத்தை சேர்ந்தவர். இருந்தாலுமே இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தார்.
இவரை எல்லோரும் கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தான் அழைப்பார்கள். அவரின் நடை, உடை, பேச்சு எல்லாம் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இருக்கு. இவர் 1955 ஆம் ஆண்டு தன்னுடைய 17 வயதில் கன்னட மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.
சரோஜாதேவி திரைப்பயணம்:
குறிப்பாக, இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் சேர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் இவர் ஆற்றிய பங்கிற்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் எல்லாம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் இவருக்கு கொடுத்திருந்தார்கள்.
அதற்குப் பின் இவர் 2019 ஆம் ஆண்டு வரை படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தார்.
சரோஜாதேவி குறித்த தகவல்:
பின் வயது மூப்பின் காரணமாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கிடையே இவர் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருமே 1986 ஆம் ஆண்டிலேயே உடல்நல குறைவால் இறந்துவிட்டார். இருந்தாலுமே சரோஜாதேவி மன தைரியத்துடன் போராடி தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் இன்று நடிகை சரோஜாதேவி வயது மூப்பின் காரணமாக உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார்.
சரோஜாதேவி இறப்பு:
இவருக்கு தற்போது 87 வயது. பெங்களூரில் தான் இவர் இறந்திருக்கிறார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமா உலகில் பெரும் இழப்பை கொடுத்திருக்கிறது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையக் கட்சியின் தலைவர் கமலஹாசன், சரோஜாதேவி மறைவிற்கு பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னை பார்க்கும் இடமெல்லாம் எந்த வயதிலும் கன்னம் கிள்ளும், விரலோடு செல்ல மகனே என்று குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜாதேவி அம்மா.
நடிகை சரோஜா தேவி மறைவுக்கு நடிகர் கமல் இரங்கல்#kamalhaasan #SarojaDevi | #KannadathuPaingili | #RIPSarojaDevi | #SarojaDeviDeath | #SarojaDeviPassedAway | #ActressSarojaDevi | #Kumudamnews24x7 pic.twitter.com/7kcAgcSljX
— Kumudam News 24x7 (@kumudamNews24x7) July 14, 2025
கமல் பதிவு:
மொழி பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர் மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான பார்த்தால் பசி தீரும் படப்பிடிப்பு தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் அவரைப் பற்றி என்னுடைய நெஞ்சில் இருந்து கொண்டிருக்கின்றது. கண்கள் எல்லாம் ததும்புகிறது. என்றைக்குமே என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாய் உள்ளம் வணங்கி வழி அனுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.