சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரித்த காரணம் இது தானா - கமல் சொன்ன விஷயம்
சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்ததற்கான காரணம் குறித்து நடிகர் கமலஹாசன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை எல்லாம் இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த அயலான் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இந்த படத்தை ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அமரன் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார்.
அமரன் படம்:
ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளியை பண்டிகை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சாய் பல்லவியின் கதாபாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.
கமல்ஹாசன் அளித்த பேட்டி:
அதில் சாய்பல்லவி, இந்து ரெபாக்கா வர்கீஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கமலஹாசன் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஏன் அமரன் படத்தை தயாரிக்க தேர்வு செய்தீர்கள்? என்று கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கமலஹாசன், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, குருதிப்புனல் படம் எல்லாமே புனை கதைகள்.
படம் தேர்வு செய்ய காரணம்:
இது அது கிடையாது. இது நிஜம். நமக்காக நிகழ்ந்த நிஜம். இந்த கதை ஏன் இப்படி போச்சு என்று கேட்கவே முடியாது. வீரருக்கு நிகரான வீரர் வீட்டிலும் இருக்க வேண்டும். இது அவரைப் பற்றிய கதையும் ஆகும். இந்த கதையை நாங்கள் தேர்வு செய்தோம் என்று சொல்ல முடியாது. இது தானாக நிகழ்ந்தது. இதை நாங்கள் கண்டெடுத்ததில் பெருமை கொள்கிறோம். இதில் எங்களுடைய கடமையை செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
கமல் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது . இதை அடுத்து பிரபாஸ்-அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் கமல் வில்லன் ரோலில் நடித்து இருந்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும்,தயாரித்தும் வருகிறார்.