வந்தியதேவனாக நடிக்க ஆசைப்பட்டு வாய்ஸ் ஓவரில் கமலின் கனவு முடிந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. இயக்குநர் மணிரத்னத்தின் நீண்டகால கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’.` பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதை தற்போது திரைப்படமாக இயக்கி இருக்கிறார் மணிரத்னம். இதை படமாக்கப் பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.

இந்தப் கதையை படமாக்க முதலில் எம்ஜிஆர் முயற்சி செய்திருந்தார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு கதாபாத்திரம் போஸ்டர்கள் எல்லாம் வெளியிட்டு இருந்தார். ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. எம்ஜிஆர் பிறகு பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க கமல் முயற்சி செய்தார். பல வருடங்களாக இது குறித்து கமல் பேசிக் கொண்டிருந்தார். பின் 1989 ஆம் ஆண்டு தன்னுடைய திட்டங்களை குறித்து வெளிப்படையாக பத்திரிக்கை ஒன்றிலும் கூறியிருந்தார்.

Advertisement

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க நினைத்த கமல்:

எப்படியாவது தமிழில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சரித்திர படத்தை எடுக்க வேண்டும் என்று கமல் நினைத்துக் கொண்டிருந்தார். பின் இது குறித்து மணிரத்தினம், பிசி ஸ்ரீ ராமிடம் கமல் விவாதித்தார். அப்போது, நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும். அதை தவறவிடக்கூடாது. அதே நேரம் திருவிழா கூட்டமாகவும் படம் இருக்கக் கூடாது என்றெல்லாம் மூவரும் விவாதித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடமும் பேசி சம்மதம் வாங்கி இருந்தார்கள்.

படம் எடுக்கமுடியாமல் போக காரணம்:

இந்த படத்திற்கு இசை அமைப்பாளர்கள் இளையராஜா என்று பேசப்பட்டிருந்தார். இந்த படத்தில் வந்திய தேவனாக கமல் நடிப்பது குறித்து உறுதியாகி இருந்தது. மணிரத்னமே பொன்னியின் செல்வன் படத்தை இயக்க வேண்டும் என்று கமல் தீர்மானம் செய்திருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் மும்முரமாக நடந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் எடுக்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பட்ஜெட் தான். அப்போதே இந்த படத்தை எடுக்க இரண்டு கோடிகள் தேவைப்பட்டது. இந்த படத்தை கமலே தயாரிக்க முடியும் செய்திருந்தார்.

Advertisement

பொன்னியின் செல்வன் படம்:

ஆனால், படத்தில் ஏதாவது குளறுபடி நடந்தால் இரண்டு கோடி என்ற பட்ஜெட் 4 கோடி ஆகிவிடும் என்ற பல சிக்கல்கள் இருந்ததால் பொன்னியின் செல்வன் படம் எடுக்காமலேயே போனது. கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களான பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

Advertisement

கமலின் கனவு:

இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடவிருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். கதையின் நாயகனாக வந்திய தேவனாக கமல் நடிக்க விரும்பினார். ஆனால், இந்த படத்தின் வாய்ஸ் ஓவரை மட்டுமே அவரால் தர முடிந்தது. மருதநாயகம் போல கமலின் நிறைவேறாத கனவாகவே பொன்னியின் செல்வன் சென்று விட்டது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement