கமல் படத்தின் டைட்டிலேயே வைத்த லோகேஷ் கனகராஜ் - வெளியானது கமல் 232 படத்தின் மோஷன் போஸ்டர்.

By Rajkumar · 7/11/2020

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' என்ற தன் முதல் படத்திலையே தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான முத்திரையை பதித்தவர் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ். அந்த வெற்றி முத்திரையை தனது அடுத்த படமான 'கைதி'யிலும் பதித்து சாதித்து காட்டினார். இந்த இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் பெயரைச் சொல்லி அவரை குறிப்பிட வருவதற்குள், கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான 'தளபதி' விஜய்யுடன் கூட்டணி அமைத்து 'மாஸ்டர்' இயக்குநர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.

அதுவும் மாஸ்டரில் விஜய் மட்டும் அல்ல, நம்ம 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். அவருக்கு இதில் மாஸான வில்லன் வேடமாம். இந்த படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் படத்தை திரையரங்கில் தான் வெளியிடுவோம் என்று மாஸ்டர் குழு உறுதியாக இருந்து வருகிறதாம். இப்படி ஒரு நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்து வந்தது.

இதற்கிடையில் சூப்பராக ஒரு கதையை ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனிடம் சொல்லி அசத்தி விட்டார் லோகேஷ் கனகராஜ் என்று செய்திகள் வெளியானது. இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169-வது படமாம். இதில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான கமல் ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் தண்டோராபோடப்பட்டு கொண்டு இருந்தது.

https://www.youtube.com/watch?v=NXSigiaZ0W0&feature=youtu.be

இப்படி ஒரு நிலையில் கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது. இப்படி ஒரு நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வலியாகியுள்ளது. இந்த படத்திற்கு விக்ரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் கடந்த 1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ஓரு படம் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full