இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது கமலா ? ரம்யா கிருஷ்ணனா ?வெளியான இன்றைய புரொமோ இதோ

By Rajkumar · 4/12/2021

என்றென்றும் மக்கள் மத்தியில் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் ஆவார். அதோடு இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் ஆவார். சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய போது இவருக்கு சளி, இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அப்போது கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

https://www.youtube.com/watch?v=i4136v76Zq4

இதனால் கமலுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருந்தது. கமலுக்கு பதிலாக கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், கமல் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுத்து வழங்க வில்லை என்று பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை சார்பாக வெளியிட்ட அறிக்கையில் 4ஆம் தேதியில் இருந்து நடிகர் கமல் தன் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா தொற்றில் முழுவதுமாக குணமடைந்து இன்று கமல் வீடு திரும்பி இருக்கிறார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் .மருத்துவமனை வாசம் முடித்து இன்று பணிக்கு திரும்பினேன். நலமாக இருக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய கமல் சிறிது நேரத்திலேயே நேராக வீட்டிற்கு சென்று இன்றைய சூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார் மேலும் இன்றைய புரொமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது

behindtalkies AMP · Quick view
View full