'எனக்கு மட்டும் தான் Sarcastic ஆ சொல்ற மாதிரி தெரியுதா' - விஜய் குறித்து விக்ரம் Promotion விழாவில் கமல் பேசியதை கேலி செய்யும் ரசிகர்கள். இந்த ஒரு வார்த்தை தான் காரணம்.

By Rajkumar · 30/5/2022

விக்ரம் 3 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிப்பது குறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

https://twitter.com/vengkat_athreya/status/1531003198584291328

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் படத்தில்,காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது.

விக்ரம் படம் ரிலீஸ்:

இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடலை சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா விக்ரம் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

https://twitter.com/MouliSuriya5/status/1531037238775099392

கமல்ஹாசன் அளித்த பேட்டி:

இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழாவை விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள். மேலும், இந்த படத்தின் பிரமோஷனுக்காக கமலஹாசன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு இருந்தார்.

https://twitter.com/raj5251/status/1531175788883501056

விக்ரம் 3 படம்:

அப்போது அவரிடம் விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் தளபதி விஜய் எதிர்பார்க்கலாமா? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு கமலஹாசன் கூறியிருப்பது, விக்ரம் 3 திரைப்படத்திற்காக ஏற்கனவே ஒருவரை தேர்வு செய்து வைத்து இருக்கிறோம். ஆனால், அதே நேரத்தில் அய்யா ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று பதிலளித்திருந்தார்.

https://twitter.com/aandavaroff/status/1530938131263868928

விஜய் படம் குறித்த தகவல்:

இப்படி இவர் அளித்திருந்த பேட்டி சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து விக்ரம் 3 திரைப்படத்திற்காக கமல் சூர்யாவைத் தான் தேர்ந்தெடுத்து வைத்து இருப்பதை மறைமுகமாகக் கூறுகிறார் என்றும் ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதே போல ஒரு சிலர் விஜய் 'ஐயா' என்று குறிப்பிட்ட கமல் அவரை கேலி செய்து இருப்பது போல இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full