நான் முதல்வர் ஆக வரவில்லை, அரசியலுக்கு வர இது தான் காரணம் - தக் லைப் பட விழாவில் கமல்ஹாசன்

By subhashini · 25/5/2025

தக்கலைப் படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது விண்வெளி நாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார்.

கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:

ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

தக் லைஃப் படம் :

மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டு வருவதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பட குழுவினர் மும்முரமாக பிரமோஷன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் நடந்திருக்கிறது. இதில் படகுழுவினர் அனைவரும் பங்கு பெற்றிருந்தார்கள். அப்போது நிகழ்ச்சியில் பேசிய கமல், சிம்பு நீங்கள் பயணிக்கப் போகும் தூரம் எனக்கு தெரியும். உங்களுக்கும் புரியும். உங்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. இந்த கூட்டத்தை வழிநடத்தும் தலைவன் நீங்கள். அந்த பொறுப்புடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறீர்கள். ஆனால், அந்த பொறுப்பு இன்னும் வளர்ந்திருக்கிறது. அது சுமையல்ல சுகம். அதை அனுபவியிங்கள். அதை பார்த்து நானும் அனுபவிப்பேன். விஸ்வரூபம் பிரச்சினை போது ரோட்டில் நின்றவர்களில் நானும் ஒருவன் என்று அசோக் செல்வன் சொன்னார்.

https://www.youtube.com/watch?v=R-r-6RfiN_A

விழாவில் கமல்:

அவர் சொன்னது போல என்னுடன் இருந்த பல ரசிகர்களை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. அவர்களுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்வது? அதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன். முதல்வராக வேண்டும் என்று நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக ஒரு எம்எல்ஏ ஒரு தொகுதிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் மெதுவாக செய்து கொண்டிருக்கிறோம். காரணம், நாங்கள் தனி மனிதர்கள். என்னுடன் இளம் வயதில் உளைத்த தம்பிகள் இன்று சமூகத்தில் பெரிய மனிதர்களாக உயர்ந்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=JRk9fWWGLqQ

அரசியல் பற்றி சொன்னது:

அதேபோல உங்களுடைய தம்பிகளும் இருக்க வேண்டும் எஸ்டிஆர். மேலும், நான் பேசுற எல்லாமே காப்பி அடித்தது தான். அபிராமியை பார்த்து பிட் அடிக்கிறீங்களா? என்று மணிரத்தினம் கேட்டார். நானே பிட்டு தான். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே போகாத பையன். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு போகாத பையன். பிட் அடிக்காமல் வேற என்ன பண்ணுவான். இப்படி பிட்டு அடிச்சு அடிச்சு டாக்டர் பட்டமே கொடுத்துட்டாங்க. ஆனால், அதை என் அக்கா கிட்ட காட்டவே இல்லை. காட்டி இருந்தால் என் தலையிலேயே கொட்டி உனக்கு இது வேற குறைவா இன்னும் படிச்சி இருக்கலாம் என்று திட்டி இருப்பார். என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு என்னை குழந்தை பருவத்திலிருந்து தூக்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு நன்றி. ஒரு கடை நிலை சினிமா ரசிகனாக இருப்பதையே நான் விரும்புகிறேன் என்று நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full