சென்னையில் பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து செல்லுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதனால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்தும், மின்சாரம் பாதிக்கப்படுவது, அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் மக்கள் தவிப்பது என பல பிரச்சனைகளை மக்கள் வருடம் வருடம் சந்தித்து வருகின்றார்கள். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சில தினங்களாகவே தொடங்கிய மழை கொஞ்சம் கூட பிரேக் எடுக்காமல் பெய்தது பெய்த படியே உள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் இந்த அளவிற்கு பெரும் மழையை சென்னை சந்தித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சென்னையில் பெரும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு முக்கியமான ஏரிகளில் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்து இருப்பதால் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்து இருக்கிறது. அதோடு பல இடங்களில் வீடுகள் தண்ணிரில் மிதக்கிறது. இதனால் மோட்டார் மூலம் மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

அதுமட்டும் இல்லாமல் மீட்பு தீவிர பணிகளும் நடந்து வருகிறது. முதல்வர் முக ஸ்டாலின் முதல் சாதாரண மக்கள் வரை என பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தரமணி பகுதி மற்றும் கருணாநிதி நகர் உட்பட சில இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உதவி செய்து உள்ளார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் கமலஹாசன் அவர்கள் பேசியது, கருணாநிதி நகரில் இருக்கும் வார்டுகளில் எல்லாம் கழிவுநீர் எல்லாம் தண்ணிரில் கலந்து இருக்கிறது. இதனால் நோய் தொற்று அதிகமாகும். மேலும், இதனால் குழந்தைகள் முதல் பெண்கள் வரை என பலரும் பாதிக்கப்படுவார்கள். குழந்தைகள் நிறைய பேர் அது தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை சரி செய்யுங்கள் என்று அதிகாரியிடம் கமலஹாசன் போனில் பேசியிருக்கிறார். பிறகு கமல்ஹாசன் அவர்கள் அங்கிருக்கும் மக்களுக்கு சாப்பாடு, பிரட் என தன்னால் முடிந்த உதவிகளை செய்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement
Advertisement