கமலா ஹரிஸ் என்னுடைய உறவினர் தான் - விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல தமிழ் நடிகை.
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் கமலா ஹாரிஸ் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் தமிழராக இருந்து வருகிறார். கமலா ஹரிஷ் தமிழகத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர், கமலா ஹரிஷ்-யின் தாத்தா டிவி கோபாலன் சுதந்திர போராட்ட தியாகி, அவரது பாட்டி இராஜம் பெண்கள் உரிமைக்காகப் போராடியவர். கமலாவின் தாயார் பெயர் ஷியாமலா இவர் 19 வயது வரை சென்னையில் தான் படித்தார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட இவர் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் இருந்து செனட்டராக ஆக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக கலிபோர்னியாவில் செனட்டராக பதவி ஏற்றார். கமலா ஹரிஷ்ஷின் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். இதன் மூலமாக கமலா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்று தெரிகிறது.
மேலும் சமூக வளைதளத்தில் கமலா ஹாரிஸ் சென்னை பெசன்ட் நகர் சேர்ந்தவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ கமலா ஹரிஷ், தான் ஒரு இந்தியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் கமலா ஹாரிஸ் தன்னை ஆப்ரிக்க அமெரிக்கன் என்றுதான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவாதங்கள் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
https://twitter.com/LakshmiPriyaaC/status/1293804459504439301
இந்த நிலையில் தமிழில் லட்சுமி குறும் படத்தில் நடித்த நடிகை லட்சுமி பிரியா, கமலா ஹாரிஸ் தன்னுடைய உறவினர் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் கமலா ஹாரிஸ் தன்னுடைய அடையாளத்தை தெளிவாக கூறிவிட்டார் அவர் ஒரு அமெரிக்கன் என்று. எனவே அவர் அடையாளத்தை இங்கே யாரும் உரிமை கொண்டாட வேண்டாம். என்னிடம் நீங்கள் கேட்கலாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று. ஏனென்றால் என்னுடைய கொள்ளுத் தாத்தாவும் அவருடைய தாத்தாவும் தூரத்து சொந்தக்காரர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.