ராஜ் வெற்றியை விட தீபிகா இத்தனை வயது மூத்தவரா - தன் வயதை ஓப்பனாக சொன்ன கனா காணும் காலங்கள் தீபிகா.

By Arun · 29/5/2023

தன்னை விட ராஜ் வெற்றி பிரபு இளையவர் என்று செய்திகள் பரவிய நிலையில் தற்போது இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் தீபிகா.சினிமாவை போல சின்னத்திரையிலும் பல காதல் கல்யாணங்கள் நடைபெற்று தான் வருகிறது. அதிலும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடித்த பல பிரபலங்கள் ரியல் ஜோடியாக மாறி இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் அடுத்தபடியாக சேர்ந்து இருக்கின்றனர் இளம் காதல் ஜோடியான ராஜ் வெற்றி மற்றும் தீபிகா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர்.அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் டிக் டாக் வீடியோ மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் போடும் வீடியோக்கள், புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம்.இவரை போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி இதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனவர் தான் ராஜ் வெற்றி பிரபு.

https://www.youtube.com/shorts/qyeUuSUYCxM

இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இப்படி ஒரு நிலையில் ராஜ் வெற்றியை விட தீபிகா வயதில் மூத்தவர் என்று செய்திகள் பரவியது. இதுகுறித்து சமீபத்தில் விளக்கமளித்துள்ள தீபிகா 'நான் பெரிய பெண் எல்லாம் கிடையாது. விக்கிபீடியாவில் நான் 1995 பிறந்தவர் என்றும், அவர் 1998ல் பிறந்தவர் என தவறாக இருக்கிறது. உண்மையில் நான் 1997ல் பிறந்தேன், அவர் 1996. மொத்தம் ஒரு வருடம் 10 மாதங்கள் ராஜா வெற்றி பிரபு என்னை விட பெரியவன்

Tamil Behind Talkies AMP · Quick view
View full