இரண்டே வருடத்தில் விவாகரத்து, திருமணத்திற்கு பின் சீரழிந்த சினிமா வாழ்கை - கனா காணும் காலங்கள் பாலாஜியை நினைவிருக்கா ?

By Rajkumar · 25/6/2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது .பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது. இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் கனா காணும் காலங்கள் தொடரில் ஜோ என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பாலாஜி. இவரது உண்மையான பெயர் பாலாஜி பாலகிருஷ்ணன். கனா காணும் காலங்கள் தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாளம் படத்தில் நடிகராக அறிமுகமான இவர் அதன் பின்னர் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் நகர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார் பாலாஜி. மேலும் தெலுங்கில் ஒரு படம் நடித்து அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் யுதன். மேலும், அதே ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார் யுதன் பாலாஜி. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தின ஸ்பெஷலாக தன் மனைவி ப்ரீத்தியுடன் இருமனதாக விவாகரத்து பெறுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார் பாலாஜி. அதன் பின்னர் இவரை சினிமாவிலும் காண முடியவில்லை. இந்த நிலையில் இவரது சமீபத்திய சில புகைப்படங்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full