திருமணமான சில மாதத்திலேயே அப்பாவான கனா காணும் காலங்கள் பிரபலம்- குவியும் வாழ்த்துக்கள்

By Ajju · 18/7/2024

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.

கனா காணும் காலங்கள் 2:

இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் டிக் டாக் பிரபலம் தீபிகா நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் அபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை போலவே டிக் டாக் மூலம் பிரபலமாகி இதே தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகனவர் தான் ராஜ் வெற்றி பிரபு.

ராஜ்- தீபிகா திருமணம்:

கடந்த ஆண்டு தான் இவர்கள் இருவரும் காதலிப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். பின் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீசன் 2வில் மதன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நரேஷ். இவருக்கு மாதவி என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சேர்ந்து நிறைய ரீல்ஸ் இவர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார்கள்.

நரேஷ்-மாதவி திருமணம்:

அது மட்டுமில்லாமல் இவர்கள் காதலை வெளிப்படையாகவே அறிவித்திருந்தார்கள். இதனால் பலருமே எப்போது கல்யாணம்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தங்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை நரேஷ் பதிவிட்டிருந்தார். மேலும், இவர்களுடைய நிச்சயதார்த்தத்திற்கு கனா காணும் காலங்கள் டீம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

கர்ப்பமான மாதவி:

அதுமட்டுமில்லாமல் இவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. தற்போது மாதவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இருவரும் சோசியல் மீடியாவில் பரவலாக கன்டென்ட் பதிவிட்டு வருபவர்கள். `We are 26 and happily pregnant' என்கிற கேப்ஷனுடன் அது சார்ந்த வீடியோக்களையும் பதிவிட்டிருக்கிறார் நரேஷ். இதை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full