என் கூட இருந்தவங்களே அவனுக்கு இதெல்லாம் தேவைன்னு - 'கனா காணும் காலங்கள்' சுரேந்தர் எமோஷனல்
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்று தான் ‘கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்து. அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது.
இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது. அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
இதை அடுத்து கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் டிக் டாக் மூலம் பிரபலமான பிரபலங்கள் சிலருக்கு விஜய் டிவி வாய்ப்பு கொடுத்தது.
சுரேந்தர் குறித்த தகவல்:
மேலும், இந்த சீரியலில் சைக்கோ ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் சுரேந்தர். இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதோடு இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியிருந்த சைரன் படத்திலும் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் படங்களில் முயற்சித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவருக்கு பைக் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் இவருடைய காலில் அடிபட்டு அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார்கள்.
சுரேந்தர் பேட்டி:
இது தொடர்பாக அளித்த பேட்டியில் சுரேந்தர், நண்பர் ஒருவரின் தெரிந்த கல்யாணத்துக்கு போகணும் என்று சொன்னான். அதனால் அவனுடைய பைக்கில் திருச்சி போயிருந்தேன். கல்யாணம் முடிந்து திரும்பி வரும்போது தான் இந்த ஆக்சிடென்ட் ஆனது. அந்த பையனுக்கு ஒன்னும் ஆகவில்லை. ஆனால், எனக்கு தான் காலில் செம அடி. ராடு வைத்திருக்கிறார்கள். 6 மாதம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது வரைக்குமே கால் நீட்டி மட்டும்தான் உட்கார முடிந்தது. இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மடக்குற அளவுக்கு குணமாகி இருக்கிறேன். இன்னும் இரண்டு மாதத்தில் எல்லாம் சரியாகிவிடும்.
குடும்பம் பற்றி சொன்னது:
வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. டிராவல், ஃபிரண்ட்ஸ் என்று சுத்தி கொண்டிருந்து நான்கு சுகத்துக்குள் உட்கார்ந்து கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது. கனா காணும் காலங்கள், சைரன் படத்தில் எல்லாம் சண்டை காட்சிகளில் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய காலில் பட்டிருக்கும் அடியை பார்த்தால் ஓட முடியுமா? சண்டை காட்சிகள் பண்ண முடியுமா? என்று எனக்கு நினைக்கத் தோணுது. ஆக்சிடென்ட் ஆனபோது என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் உதவி கேட்டு மெசேஜ் போட்டு இருந்தார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலபேர் உதவி இருந்தார்கள். அவர்களுக்கு எல்லோருக்குமே இந்த தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
https://www.youtube.com/watch?v=Stv42NDMUEk
நண்பர்கள் செய்தது:
வீட்டு செலவுகளை எல்லாம் என்னுடைய மாமா பார்த்துக்கொள்கிறார். என்னை என்னுடைய பாட்டியும், தம்பியும் தான் பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு அம்மா-அப்பா இல்லை. இந்த விபத்து ஏற்படுவதற்கு முன்னாடி மூணு, நாலு ப்ராஜெக்டில் ஒப்பந்தம் ஆகியிருந்தேன். விபத்து நடந்ததால் அதை என்னால் பண்ண முடியாமல் போய்விட்டது. விபத்து நடந்தது தெரிந்ததுமே ஏகன் அண்ணா, செல்வா, கார்த்தி எல்லோருமே முதல் நாளே வந்துவிட்டார்கள். நிறைய பண உதவிமே செய்திருக்கிறார்கள். கனா காணும் காலங்கள் டீமில் இருந்து நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. ஆனால், என் கூட நன்றாக கிளோஸ் ஆக இருந்த சில பேர் எனக்கு இப்படி ஆகிவிட்டது என்று தெரிந்தும் அவனுக்கு இதெல்லாம் தேவைதான் என்று சொல்லியிருந்தார்கள். அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.