ஆசப்பட்டா மட்டும் போதாது, அடம் பிடிக்கத் தெரியனும்.! Kanaa - Official Teaser

By Ajju · 23/8/2018
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் பாராட்டக்கூடியது. வேலைக்காரன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் "சீமராஜா" படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது "கானா" என்ற படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகியுள்ளது. [embed]https://youtu.be/2hoDCYwU3LI[/embed] தமிழ் சினிமாவில் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு வெற்றியை தேடித்தரும். ஆனால் இதுவரை பெண்கள் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் குறைவே.அதனால் இந்த படத்தை பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் ராஜா. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் தந்தையாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நடுத்தர குடும்பப்பெண் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் ஒரு பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சி பெற்று வந்தார் நடிகை ஐஸ்வர்யா.
Tamil Behind Talkies AMP · Quick view
View full