எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் வெட்ட சொன்ன CBFC, கோபத்தில் கொந்தளித்த கங்கனா ரனாவத்

By subhashini · 3/10/2024

எமர்ஜென்சி படம் தொடர்பாக தணிக்கை குழு எடுத்த முடிவை எதிர்த்து நடிகை கங்கனா ரனாவத் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார்.

இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது கங்கனா நடித்திருக்கும் படம் எமர்ஜென்சி. இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தியிருந்த அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இந்த படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கனா திரைப்பயணம்:

இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தினுடைய திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதி இருக்கிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தினுடைய ரிலீஸ் தேதி மட்டும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. அதோடு இந்த படம் கடந்த மாதம் ஆறாம் தேதியே வெளியாக இருந்தது. ஆனால், சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காததால் இந்த படம் இழுத்தடித்துக் கொண்டே வரப்படுகிறது.

சென்சார் போர்டு சொன்ன தகவல்:

இந்நிலையில் இது தொடர்பாக கங்கனா ரனாவத்துடன் இணைந்து படத்தை தயாரித்த ஜீ டிவி நிர்வாகமும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை எடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்சார் போர்ட் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்ய சொல்லி கேட்டிருக்கிறோம். அதில் நான்கு இடங்களில் வெட்ட வேண்டும், மூன்று இடங்களில் திருத்தம் செய்யவும், 6 இடங்களில் புதிதாக சேர்க்கவும் கூறியிருக்கிறோம். இதனை செய்து முடித்தால் எமர்ஜென்சி படத்திற்கு யு ஏ சான்றிதழ் கொடுக்கப்படும்.

படம் குறித்து சொன்னது:

படத்தில் சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடுவது, காலிஸ்தான் போன்றவற்றை அகற்றும் வேண்டும். சஞ்சய் காந்தி மற்றும் ஜெயில் சிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சில வார்த்தைகளில் திருத்தம் செய்ய சொல்லி இருக்கிறோம். சீக்கிய அமைப்புகள் மற்றும் கோர்ட் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவித்து இருந்தார். இப்படி சென்சார் போர்டு கூறிய திருத்தங்களை கேட்டு கங்கனா கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=6W_23Dx9fnc

கங்கனா அறிக்கை:

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், சென்சார் போர்டு தெரிவித்த சில பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் சில திருத்தங்கள் நியாயம் அற்றதாக இருக்கிறது. இந்த படத்தினுடைய நம்பகத் தன்மையை பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். படத்தை பார்த்த வரலாறு ஆய்வாளர்கள் மற்றும் மறு ஆய்வுகமிட்டி பாராட்டி இருக்கிறார்கள். உண்மை தன்மையில் இருந்து ஒரு சதவீதம் கூட விலகவில்லை. இந்த படத்திற்காக நாங்கள் போராட்டத் தயாரிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் படம் வெளியாக தாமதம் ஆவதால் அதனால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய கங்கனா, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டை விற்பனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

behindtalkies AMP · Quick view
View full