இடிக்கப்பட்ட கங்கனா ரணாவத்தின் அலுவலகம் - காரணம் இது தானாம்.

By Rajkumar · 9/9/2020

பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரணாவத்தின் வீடு இடிக்கப்ட்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். தாம் தூம் படத்திற்கு பின்னர் தமிழில் இவர் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகை கங்கனா.

https://twitter.com/KanganaTeam/status/1303632561239781376

அது போக இவர் பாலிவுட்டில் மிகவும் சர்ச்சையான ஒரு நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கிறார். ரித்திக் ரோஷன் உடனான காதல் விவகாரம் துவங்கி சமீபத்தில் உயிர் இழந்த சுஷாந்த் வரை இவர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதிலும் சுஷிநாத் சிங் மரணத்திற்கு பின்னர் இவர் அடிக்கடி பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் குறித்து பல கருத்துக்களை கூறி வந்தார்.

இதனாலேயே இவருக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு மிகப்பெரிய கூட்டமே செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கங்கனா அலுவலகம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்பின் அவரது அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு, புல்டோசரை கொண்டு இடித்து தள்ளியுள்ளனர். சமீபத்தில் நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்மையில் கூட, மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல என காட்டமாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் இன்று 12.30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா,  மும்பை பாகிஸ்தானாக மாறி உள்ளது. இங்கே ஜனநாயகம் இறந்துள்ளது என்று கூறியுள்ளார்.

https://twitter.com/KanganaTeam/status/1303569152917946368

behindtalkies AMP · Quick view
View full