கங்குவா முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? இப்படி போனா 2000 கோடி இல்ல 200 கோடியே கஷ்டம் தான்
கங்குவா படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் கங்குவா படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா
தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
கங்குவா படம்:
இந்த நிலையில் கங்குவா படத்தின் உடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட கங்குபா படம் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த படம் 22 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் 4 கோடி ஈட்டி இருக்கிறது. வட இந்தியாவில் பெரிதாக வரவேற்கப்படவில்லை. இப்படி இருக்கும் நிலையில் படத்தின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் 58.62 கோடி செய்து இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
Like a wild storm in the box offices worldwide 💥 Lauded by all, our #Kanguva collects over 58.62 Crores ✨
— Studio Green (@StudioGreen2) November 15, 2024
Thank you to all the Anbaana Fans, Cinema Lovers and Audiences who made this happen💖 #KanguvaRunningSuccessfully 🗡️
Book your tickets here https://t.co/aG93NEBPMQ… pic.twitter.com/ZySlw6zLa1
வசூல் குறித்த அறிவிப்பு:
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 42.3 கோடி தான் வசூல் செய்தது. இதைவிட 13 கோடி கங்குவா வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். மேலும், கங்குவா படம் நெகட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில் வசூல் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கையை தான் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
Bro success meet date pls #Kanguva pic.twitter.com/0GQ5XJjRUm
— Mahi Bro (@Mahi14345) November 15, 2024
நெட்டிசன்கள் ட்ரோல்:
குறிப்பாக, கங்குவா படத்தின் ரிலீசுக்கு முன்னாடி தயாரிப்பாளர் ஞானவேல், கண்டிப்பாக 2000 கோடியை தாண்டும். அதோடு இசை வெளியீட்டு விழா நடந்த இந்த இடத்திலேயே படத்தினுடைய சக்சஸ் மீட்டையும் நடத்துவோம். எல்லோருக்கும் சொல்லி அனுப்புறோம் என்றெல்லாம் பேசி இருந்தார். வெளிவந்த பிறகு இந்த படம் 200 கோடியை தாண்டுமாவே தெரியவில்லை. அதுக்குள்ளே படம் சூப்பர் ஹிட்டா? என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.
படத்தின் கதை:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது.
அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.