மூன்றாவது திருமணம் 'என் வாழ்க்கையையும் அழிச்சிட்ட' - கவிஞர் தாமரை பகீர் குற்றச்சாட்டு

By Manikandan · 25/12/2022

தன்னுடைய வாழ்க்கையை அழித்து விட்டதாக 37 வயதாகும் ஒரு பெண்ணின் மீது பிரபல கவிஞர் தாமரை குற்றச்சாட்டு கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் தென்னம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி ஈஸ்வரி இவர்களுக்கு சிவா என்ற மகன் உள்ளார் அவர் எம்.பி.ஏ பட்டதாரி. இந்த நிலையில் சிவாவுக்கும் சென்னையை சேர்ந்த விஜி பழனிசாமி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தொடர்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே தனக்கு ஏற்கனவே விவாகரத்து ஆனதை தெரிவித்துள்ளார் சிவா. மேலும் விஜி ஏற்கனேவே திருமணமானவர் என்றும் 3 குழந்தைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. நாளடைவில் விஜி சில நம்பர்களுடன் பழகி வருவதை அறிந்த சிவா அவருடைய செல்போனில் விஜி அவரது நண்பர்களுடன் இருந்த ஆபாச புகைப்படங்களை பார்த்துள்ளார்.

இதனால் விஜியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய பின்னர் விஜி சிவா வேலை செய்யும் இடத்திற்கு வந்து காலில் விழுந்து இதை போல் இனி செய்ய மாட்டேன் என்று கூற சிவாவும் மனமிரங்கி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் மீண்டும் தகராறு நடந்து விஜியும் சிவாவும் பிரிந்துள்ளனர். அதற்கு பிறகு விஜி தன்னுடைய நம்பர்களுடன் உளவியல் ரீதியாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தங்காமல் சிவா தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக 43ஆடியோ பதிவு செய்துள்ளார். அதில் நான் சாக்கடையில் விழுந்து விட்டேன் என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் என்று கூறிக்கொண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து குடும்ப பிரச்னையால் தான் தற்கொலை செய்துவிட்டார் என்று வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார். ஆனால் அவரது பெற்றோர்கள் தங்களுடைய மகன் தொடர்பாக பல்வேறு ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை கொண்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.

கவிஞர் தாமரை கூறியது :

இந்த புகாரை தொடந்து விசாரணை செய்ததில் விஜி என்பவர் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பிரபல கவிஞர் தாமரை கூறிய தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது `என்னுடைய முன்னாள் கணவருக்கும் எனக்கு ஏற்பட்ட பிரிவுக்கு காரணம் இந்த விஜி என்கிற விஜயலட்சிமிதான். இவரால் தான் என்னுடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இவர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பிரபல கவிஞர் தாமரை தன்னுடைய முகப்பு பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த நிலையில் 37 வயதாகும் விஜயலட்சிமி பல்வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணமோசடியும் செய்ததாக கூறப்படுவது மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full