ஒயின் ஷாப் கடை கொஞ்சம் அதிகமாக்கனும், டைமிங் மாத்தணும் - கஞ்சா கருப்பு சர்ச்சை பேச்சு
கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
படவிழாவில் நடிகர் கஞ்சா கருப்பு பேசிய விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஆகி இருக்கிறது. நடிகர் ரவி மரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் மக்கள் தலைவா. இந்த படத்தில் ராதாரவி, கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குனர் பேரரசு, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை இயக்குனர் ராம்தேவ் இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் அண்ணனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் தேனியில் மன்னன், சினிமா உலகின் கடவுள்.
கஞ்சா கருப்பு படம்:
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படத்தின் இயக்குனர் ராம்தேவுக்கு ஒரு தேவை என்றால் அதிகாலை 3 மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு போன் செய்து படப்பிடிப்பிற்கு வரச் சொன்னார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு போனேன். அந்த ஒயின் ஷாப் கதவு மூடி இருந்தது. யாருமே அங்கில்லை. நான் சென்று கடை கதவை தட்டியதுமே உள்ளே இருந்து வந்த ஒருவர் எட்டிப் பார்த்தார்.
கஞ்சா கருப்பு பேசியது:
அவர் பிளாக்குக்கு சரக்கு கிடையாது என்று சொன்னார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை, நடிக்க வந்திருக்கிறேன். இயக்குனர் இங்கு தான் வர சொன்னார் என்று சொன்னேன். அதன் பிறகு ப்ரொடக்ஷன் நபர் எனக்கு போன் செய்து வந்துவிடுகிறேன் என்று சொன்னார். இன்னொரு முக்கியமான விஷயம் இப்போது இரவு ஒன்பதே மணிக்கு கடைகளை முழுமையாக முடிகிறார்கள். இந்த ஆட்சியில் மது கடைகளை இரவு 12 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும்.
கஞ்சா கருப்பு கோரிக்கை:
அதேபோல் காலையில் 7:00 மணிக்கே திறந்து விட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே ஒயின்ஷாப்புகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது. கடைகளின் எண்ணிக்கையை இன்னும் கொஞ்சம் அதிகமாக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கையும் வைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி கஞ்சா கருப்பு நிகழ்ச்சியில் பேசி இருந்த விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. பலருமே கஞ்சா கருப்பு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கன்னடம் தெரிவித்தும் வருகிறார்கள்