'பர்ஸ்ட் நைட்ல' என்ன பண்ணுவீங்க - செய்தியாளரிடம் கேள்வி எழுப்பிய பிரபல நடிகை.

By Rajkumar · 15/11/2021

முதல் இரவில் எல்லோரும் என்ன செய்வாங்க? என்று பத்திரிகையாளரிடம் பிரபல நடிகை கேட்ட கேள்வி தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ரக்சிதா ராம். 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'புல்புல்' என்ற கன்னட படத்தின் மூலம் தான் இவர் கன்னட சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இப்போது வரை பல ஆண்டு காலமாக கன்னட மொழியில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் கன்னட திரையுலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இணைந்து நடித்துள்ளார்.

இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு கன்னட சினிமா உலகில் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக படங்களில் நடித்து வரும் நடிகையும் ரக்சிதா ராம் என்று சொல்லலாம். தற்போது இவர் ‘லவ் யூ ரச்சூ’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் ராவ் நடித்து உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு தான் பெங்களூரில் நடைபெற்று இருந்தது.

இதையும் பாருங்க : அர்ஜுனின் செங்கோட்டை முதல் மஹா பாரத தொடர் வரை இயக்கிய இயக்குனர் திடீர் மரணம்.

அப்போது இந்த படத்தில் காதல் காட்சிகளில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் ரக்சிதாவிடம் பல கேள்விகள் கேட்டு இருந்தனர். இதற்கு ரக்சிதா அவர்கள் கூறியது, இங்கு வந்திருக்கும் பலருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். யாரும் சங்கடமாகவும், தவறாகவும் நினைக்க வேண்டாம். பொதுவாக முதலிரவின் போது என்ன செய்வார்கள்? ரொமான்ஸ் தானே செய்வார்கள். அது தான் இந்த படத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளது.

காதல் காட்சிகளில் நான் நெருக்கமாக நடித்து இருந்தால் அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும். மேலும், இந்த படத்தை பார்க்கும் போது அதற்கான காரணத்தை நீங்களே புரிந்துகொள்வீர்கள் என்று கூறியிருக்கிறார். ரக்சிதா அளித்த பதில் பேட்டி எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களுக்கு மூக்கு உடைந்த படி இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இவர் பேட்டி அளித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full