ட்ரெண்டிங்கில் வந்த #TitleStealingStarYash - யாஷை திட்டி தீர்க்கும் கன்னட ரசிகர்கள், என்ன காரணம் பாருங்க.
கன்னட ரசிகர்களே நடிகர் யாஷை விமர்சித்து பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு இருந்தது. மேலும், முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது.
அதோடு இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை செய்து இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கே ஜி எஃப் 2 படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் பாலிவுட் ஸ்ரீநிதி சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்து இருக்கிறார் மற்றும் பவுன் கௌடா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும், படத்தில் கருடனைக் கொன்று கேஜிஎப்பில் கால் தடம் பதித்து இரண்டாம் கதையை துவங்குகிறார் யாஷ் .
கே ஜி எஃப் 2 படத்தின் கதை:
ஆனால், அது அங்கிருக்கும் பலருக்கு பிடிக்காமல் போகிறது. அந்த இடத்தில் இருந்து யாஷை தூக்க வேண்டும் என்று பலரும் திட்டங்களை தீட்டுகின்றனர். இறுதியில் யாஷ் கேஜிஎப் மக்களை காப்பாற்றினாரா? எதிரிகளை துவம்சம் செய்தாரா? மக்களின் காப்பாற்றினாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருந்த கேஜிஎப் 2 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்திய அளவில் ஒரே படத்தின் மூலம் பேன் இந்தியா ஸ்டாராக யாஷ் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
கே ஜி எஃப் 2 படம் குறித்த தகவல்:
தற்போது இந்தியா முழுவதும் மாஸ் ஹீரோவாக எல்லோர் மனதிலும் யாஷ் நின்று விட்டார். இப்படி புகழின் உச்சத்தில் உள்ள யாஷை கன்னட ரசிகர்கள் கிண்டல் அடித்து பதிவிட்டு வரும் மீம்ஸ் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிற மொழி ரசிகர்கள் கேஜிஎப் யாஷை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிருக்கும் போது கன்னட மொழி ரசிகர்கள் யாஷ் மீது வன்மத்தை தெளித்துக் கொண்டு இருக்கின்றார்கள். கன்னட மொழியில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தர்ஷன். இவரை தான் பாக்ஸ் ஆபீஸின் சுல்தான் என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
யாஷை விமர்சித்த கன்னட ரசிகர்கள்:
ஆனால், இப்போது பாக்ஸ் ஆபீஸில் சுல்தான் என்று எல்லோரும் யாஷை குறிப்பிடுகிறார்கள். இதை பொறுக்க முடியாத தர்சன் ரசிகர்கள் யாஷ் மற்றும் கேஜிஎஃப் படக்குழு அனைவரையும் வச்சி செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ராஸ்மிகா மந்தனாவின் எக்ஸ் ரக்ஷித் செட்டியை தான் எல்லோரும் ராக்கிங் ஸ்டார் என்று அழைத்தார்கள். அந்த டைட்டிலை தான் யாஷ்க்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் டைட்டிலை திருடியவர் யாஸ் என்று கிண்டலடித்து மீம்ஸ்களை உருவாக்கி இருக்கிறார்கள் கன்னட ரசிகர்கள். 25 நாளில் 1500 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் கேஜிஎப், பாகுபலி போன்ற படங்களுக்கு டப் கொடுத்த படம்.
கேஜிஎப் படத்தால் கிடைத்த பெருமை:
இப்படி கன்னட மொழி இந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கும் நிலையில் கன்னட ரசிகர்கள் இப்படி அசிங்கப் படுத்தி கொள்வது வருத்தத்திற்குரிய ஒன்று. கேஜிஎப் மாதிரி ஒரு படம் வெளியே வரவில்லை என்றால் சாண்டல்வுட் என்ற இண்டஸ்ட்ரி வெளியே தெரியாமல் போயிருக்கும். யாஷ், பிரசாந்த் நீல் தாங்கள் மட்டும் பிரபலமானது மட்டுமில்லாமல் மொத்த இன்டஸ்ட்ரியையும் உலக அளவில் காண்பித்திருக்கிறார்கள். இதை கன்னட ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும். படத்தின் டயலாக் ஏற்ற மாதிரி யாஷ் அடித்த 10 பேருமே டான் தான்.