வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன் - நடிகைக்கு நேர்ந்த பிரச்சனை. குசும்பான ஆளா இருந்திருக்கார்.

By Rajkumar · 25/4/2023

கண்ணதாசன் பாடலில் நடிகையின் வயது சொன்னதால் ஹீரோயினிக்கு வந்த பிரச்சனை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என இயற்றி இருக்கிறார். இவர் பல நாள் இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

மேலும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன். இவர் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். பல காலமாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செய்து வந்த கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் தன்னுடைய 54 வயதில் காலமானார். இவர் மறந்தாலும் இவரின் பாடல்களின் மூலம் இன்றும் அவர் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து தான் வருகிறார்.

பாடலும் உண்மைகளும் :

பெரும்பாலும் இவர் காதலிப்பவர்கள், காதலில் தோல்வியுற்றவர்கள், குடும்ப பிரச்சினை சிக்கியிருப்பவர்கள் என வாழ்க்கையில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், சந்தோசத்துக்கும் ஏற்றவாறு பாடல்களை எழுதுவார். இவருடைய கவிதைகள் எல்லாம் கற்பனைகளுக்கு தாண்டி அவரை சுற்றி நடக்கும் விஷயங்களை வைத்தும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இவருடைய பாடல் பின்னால் பல உண்மை கதைகள் இருக்கும்.

கண்ணதாசனின் குசும்புகள் :

மேலும், இவருடைய பாடல்களுக்கு பின்னால் இருக்கும் உண்மை கதைகளை கண்ணதாசன் உடன் பணியாற்றிய பலரும் இன்று வரை சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். அந்த வகையில் ஒரு பாடலின் கதை பற்றி தான் தற்போது வெளியாகி இருக்கிறது. எப்போதுமே கண்ணதாசன் அவர்கள் ஹீரோ, இசையமைப்பாளர்களை சீண்டி பார்ப்பது வழக்கம். ஆனால், இவருடைய ஒரு பாடலில் ஹீரோயினியை பற்றி எழுதியிருக்கிறார்.

வயதை சொன்ன கண்ணதாசன் :

அதாவது, நடிகர் சிவாஜி கணேசன் நடித்த அன்னை இல்லம் என்ற படத்தில் அவருடைய காதலியாக தேவிகா நடித்திருப்பார். அவரை நினைத்து பாடுவது போல ஒரு பாடல் இருக்கும். இந்த பாடல் எண்ணிரண்டு 16 வயது என தொடங்கும். அந்த காலத்திலேயே இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இந்த பாடல் வரிகளை கேட்டவுடன் இயக்குனர், இசையமைப்பாளர் தேவிகாவை பார்த்தால் உங்களுக்கு 16 வயது பெண் போல தெரிகிறதா? என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

தேவிகாவிற்கு ஏற்பட்ட சிக்கல் :

அதற்கு கண்ணதாசன், பாடலை நன்றாக கேளுங்கள். எண்ணிரண்டு பதினாறு என்று நான் எழுதினேன். அதாவது, இரண்டு 16 சேர்த்தினால் 32 தானே என்று சிரித்தார். உண்மையில் தேவிகா இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 32 வயது தான். அதுமட்டுமில்லாமல் பொதுவாகவே நடிகைகள் தங்களுடைய வயதை வெளியில் சொல்ல மாட்டார்கள். ஆனால், கண்ணதாசன் ஒரு பாட்டின் மூலம் பிரபல நடிகையின் வயதை வெளியில் சொல்லி சிக்கலில் மாட்டி விட்டிருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகிவருகிறது .

Tamil Behind Talkies AMP · Quick view
View full