அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கண்ணகி. இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஷான் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நான்கு பெண்களின் கதையை காண்பிக்கிறார்கள். முதல் பெண் அம்மு அபிராமிக்கு நீண்ட நாட்களாகவே திருமணம் நடைபெறாமல் இருக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் அம்மா வரும் ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக் கழித்து விடுகிறார். இன்னொரு கதையில் ஷாலின் ஜோயா தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையே இல்லை. இதனால் இவர் அவருடைய பாய் பிரண்டுடன் லிவிங் டு எதிரில் வாழ்ந்து வருகிறார்.

Advertisement

இன்னொரு பக்கம் கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கிறார். இதை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று அவரும் அவர் காதலரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். இன்னொரு கதையில் வித்யா பிரதீப் தன்னுடைய கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அவர் கணவர் விவாகரத்துக் கொள்கிறார். ஆனால், வித்யா பிரதீப் அவருடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். இப்படி நான்கு பெண்களும் நான்கு வித்தியாசமான வாழ்க்கையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நான்கு கதையும் ஒரு இடத்தில் சேர்கிறது. இதில் ஒவ்வொரு பெண்களும் எந்தெந்த பிரச்சனையை சமாளித்தார்கள். இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையமாக இயக்குனர் எடுத்திருக்கிறார். அறிமுகம் இயக்குனராக இருந்தாலும் முதல் படத்திலேயே கதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். எதார்த்த காட்சிகளை படத்தில் கொடுத்திருக்கிறார். குறிப்பாக வசனங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

Advertisement

நடிகைகளும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் டீவ்ஸ்ட் நன்றாக இருக்கிறது. திருமணத்திற்காக காத்திருக்கும் பெண், திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஒரு பெண், காதலனால் கர்ப்பமான பெண், கணவனால் விவாகரத்து விவாகரத்து கேட்டு நிற்கும் பெண் இப்படி நான்கு பெண்களுடைய வலி வேதனையை இயக்குனர் அழகாக காண்பித்து இருக்கிறார். பாடல்கள் பெரியளவு ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது.

Advertisement

முதல் பாதையில் நான்கு பெண்களுடைய வாழ்க்கை சொல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அதை கொண்டு சென்ற இடத்தில் இயக்குனர் கொஞ்சம் சிதப்பிவிட்டார். சில இடங்கள் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டதட்ட 2 3/4 மணி நேரம் இந்த படம் ஓடுகிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக கண்ணகி இருக்கிறது.

நிறை:

கதைக்களம் ஓகே

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கிளைமாக்ஸ் சிறப்பு

குறை:

இரண்டாம் பாதி சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

சில தேவையில்லாத காட்சிகள்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

மொத்தத்தில் கண்ணகி- வெற்றி

Advertisement