கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நாயகியை எதோ ஒரு படத்துல பாத்த மாதிரி இருந்துச்சா ?

By Rajkumar · 9/3/2020

தமிழ் சினிமாவில் இந்த 2020ம் ஆண்டில் வெளியான படங்களில் பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாகப் எதிர் பார்பே இல்லாமல் பல திருப்பங்களுடன் அண்மையில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது வருகிறது. மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் 25 வது படம் தான் இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.

படத்தின் டைட்டிலை பார்த்துவிட்டு, இது ஏதோ வழக்கமான துல்கர் சல்மானின் ரோமன்ஸ் படமாக தான் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படு சூப்பரான ஒரு திரில்லிங் படமாக இந்த படம் அமைந்துள்ளது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். இந்த படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கிய ரோலில் செய்திருந்தார்கள். அதில் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஆட்களாக துல்கர், கௌதம் மேனன், ராட்ஷன் என்று சிலர் மட்டும் தான் இருந்தார்கள்.

ஆனால், இந்த படத்தின் கதாநாயகியை பலரும் முதல் முறை ஒரு கதாநாயகியாக பார்த்தாலும், இந்த பொண்ணை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே என்ற கேள்வி உங்களுக்கு படம் பார்த்த போது நிச்சயம் ஓடிக்கொண்டு இருந்திருக்கும். ஆம், அது உண்மை தான். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் பெயர் ரித்து வர்மா. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மாடல் அழகியான இவர் 2013 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'பாட்சா' என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'VIp 2' படத்தில் தான். vip படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் வேலை செய்யும் கம்பெனி ஓனர் பெண்ணாக சுரபி நடித்திருப்பார். அவரது கதாபாத்திரத்தில் தான் நடிகை ரித்து வர்மா Vip 2 படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full