தமிழில் வைபவ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனம் பாஜ்வா. மும்பையில் பிறந்த இவர் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.

மாடல் அழகியான இவர் பஞ்சாப் மொழியில் 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பெஸ்ட் ஆப் லக்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

தமிழில் கப்பல் படத்திற்கு பின்னர் வேறு எந்த படத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கிலும் அம்மணிக்கு ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டும் தான் கிடைத்து. இதனால் மீண்டும் சொந்த ஊரான பஞ்சாபிற்கே திரும்பி சென்றுவிட்டார்.

தற்போது பஞ்சாபில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் இவர் மாடல் அழகி என்பதால் நிஜ வாழ்க்கையில் படு கவர்ச்சியான பேர்வழியாக தான் இருந்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க இவரது கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது.

Advertisement
Advertisement