விஜய்காக எழுதிய கதையில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த 'Shroov' கரண் அண்ணா - எந்த படம் தெரியுமா ?

By Arun · 14/5/2022

தமிழ் சினிமா உலகில் நடிகராகவும், இயக்குனராகவும் பல பேர் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மூர்த்தி. இவர் வேற யாரும் இல்லைங்க, பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆன்டனியுடன் பிச்சைக்காரராக நடித்து இருப்பார். ஆனால், அதற்கு முன் இவர் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக வலம் வந்து கொண்டு இருந்தார். கரண் நடித்த கருப்பசாமி குத்தகைதாரர், பசுபதி நடித்த வெடிகுண்டு முருகேசன், பப்பாளி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் மூர்த்தி.

அதன் பின்பு இவர் சசி இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியுடன் பிச்சைக்காரனாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து இவர் சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்து இருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மூர்த்தி அவர்கள் திரையுலக அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

மூர்த்தி அளித்த பேட்டி:

அதில் அவர் கரண் நடிப்பில் வெளியான கருப்பசாமி குத்தகைக்காரர் படம் குறித்து கூறியிருப்பது,
கடல என்ற ஒரு படம் பண்ண நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லை. யூத் லவ்வுடன் கூடிய காமெடி கதை. அந்த கதையை தான் உருவாக்கி இருந்தேன். கதை சொல்ல போன இடத்தில் எல்லாம் கதை நல்லா இருக்கு. ஆனால், ஃபைட் இல்லையே என்று பலரும் யோசித்தார்கள். இந்த கதையில் பைட் வைக்க முடியாது என்பதால் வேறு கதையை செய்தேன்.

முதலில் விஜய் எழுதிய கதை:

எழுதும்போது சிறியதாக இருந்த கதை முடிக்கும் போது ரொம்ப பெரிதாகி விட்டது. பின் ஏதாவது மாஸ் ஹீரோ வைத்து பண்ணலாமல் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். பின் அந்த கதையை விஜய் சாரிடம் சொல்ல ஆறு மாதங்களாக முயற்சி செய்தேன். இந்த கதை எல்லாம் திருப்பாச்சி படத்திற்கு முன்பு நடந்தது. மேலும், நான் அந்த கதைக்கு பரட்டை என்று பெயர் வைத்து இருந்தேன். ஒருநாள் இயக்குனர் பாண்டிராஜ் கால் பண்ணி கடல கதையை கரண் சாரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார்.

கரண் சாருக்கு எழுதிய கதை:

நானும் ஒரு தயாரிப்பாளரிடம் கரன் சாருக்கான அந்த கதையை கூறியபோது கதை நல்லா இருக்கு. இதை ஏதாவது புது முகத்தை வைத்து பண்ணலாம். கரன் சாருக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்னார். கரண் சார் படத்தை ஆரம்பிக்கும்போது உங்கள் கதையை புதுமுகத்தை வைத்து ஆரம்பிப்போம் என்று உறுதியும் கொடுத்தார். கரண் சார் படம் ஆரம்பித்தால் தான் நம் படம் ஆரம்பிக்கும் என்பதால் என் நண்பர்களிடம் சென்று கரண் சாருக்கு கதை இருக்கா? என்று கேட்டேன்.

விஜய் சாருக்காக வைத்த கதை:

பின் ஒருநாள் ரூமில் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த சைக்கிள் ஸ்டாண்ட் பரட்டை கதையைக் கரண் சாருக்கு சொல்லலாமே என்று பாண்டிராஜ் சொன்னார். நான் அது விஜய் சாருக்காக வைத்திருக்கும் கதை. அதனால், முதலில் நான் யோசித்தேன். பின் என்னுடைய சூழ்நிலை என்னை நெருக்கடிக்கு தள்ளியதால் விஜய் சாருக்காக வைத்திருந்த கதையை அப்படியே கரண் சாரிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்து விட்டது. பின் கதையில் பல மாற்றங்கள் செய்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் கருப்பசாமி குத்தகைக்காரர் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full