சைஃப் அலிகானை 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்ய இதுதான் காரணம் - மனம் திறந்த கரீனா கபூர்.

By subhashini · 18/11/2023

ஐந்து வருடம் கழித்து திருமணம் செய்ததற்கு காரணம் இது தான் என்று பாலிவுட் நடிகை கரீனா கபூர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கரீனா கபூர். இவர் ஹிந்தியில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள். மேலும், நடிகை கரீனா கபூர் அவர்களின் குடும்பமோ திரை குடும்பம் என்று சொல்லலாம்.

அவருடைய தந்தை, தாயார், சகோதரி அனைவருமே பிரபலமான நடிகர்கள். அதன் காரணமாகவே இவர் தன்னுடைய சிறிய வயதிலேயே சினிமா உலகில் வந்து விட்டார். நடிகை கரீனா கபூர் முதன் முதலாக ரெப்யுஜீ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து வந்தார். இன்று வரை பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் நடிகை கரீனா கபூர். இதனிடையே கரீன கபூர் மற்றும் சைப் அலி கான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் காதலித்து கொண்டார்கள்.

கரீனா கபூர்-சைப் அலிகான் திருமணம்:

நடிகர் சைப் அலி கான் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தற்போது கரீனா சினிமா, விளம்பரம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் தன் குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை கரீனா கபூர் அவர்கள் திருமணத்திற்கு முன் 5 வருடங்கள் சைப் அலி கான் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்திருக்கிறார்கள்.

கரீனா கபூர் பேட்டி:

அதற்கு பின் தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கரீனா, மனம் ஒத்துப்போன இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு காரணம் அவர்களுக்கு குழந்தை வேண்டும் என்பதுதான். ஒருவேளை குழந்தை வேண்டாம் என நினைத்தால் ஒன்றாக வாழலாம். நாங்களும் அதே போல தான் ஐந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் நாங்கள் எங்களுடைய வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர விரும்பினோம்.

திருமணம் குறித்து சொன்னது:

பின் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டோம். அதனால்தான் ஐந்து வருடங்களுக்கு பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க நினைக்கிறேன். அவர்களுக்கு சுதந்திரமாகவும், தனிப்பட்டவர்களாகவும் இருக்க அனுமதிப்போம். அப்போது தான் அவர்கள் தங்களுக்குள் தங்களை கண்டுபிடிப்பார்கள். அவர்கள் அவர்களுடைய சொந்த பாதை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைகள் ரொம்ப நெகிழ்வானவர்கள் என் வாழ்க்கையை என் குழந்தைகளுடன் நான் வாழ விரும்புகிறேன்.

வாழ்க்கை குறித்து சொன்னது:

அவர்களுடன் இணைந்து எல்லாவற்றையும் செய்ய நினைக்கிறேன். குழந்தைகளை மகிழ்ச்சியாக வளர்க்க வேண்டும் என நினைத்தால் தான் முதலில் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளுடைய வாழ்க்கையும் செழிக்கும். நம் மன ஆரோக்கியத்திற்கும் நாம்தான் பொறுப்பு. நான் என் குடும்பம்,குழந்தைகள் கணவர், என்னுடைய ஐந்து நண்பர்களுடன் ரொம்ப நெருக்கமாக இருக்கிறேன். இவர்கள் தான் இவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கை. எனக்கு இவர்கள் வேண்டும். என்னுடைய முதல் நாள் சூட்டிங். முதல் இப்போது வரை என் உதவியாளர் என்னுடன் தான் இருக்கிறார். நான் அவர்களைப் போக சொல்லவில்லை. அவர்களும் என்னை விட்டுப் போக மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்

Tamil Behind Talkies AMP · Quick view
View full